Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2025.. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு எவ்வளவு?

துபாய்: ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் அணிகள் விளையாடுகின்றன.

இதே போன்று குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. இந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும். அதில் டாப் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாட முடியும்.

Asia cup 2025

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம். ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை எட்டு முறை இந்திய அணி வென்றிருக்கிறது. ஆனால் இம்முறை t20 போட்டிகளாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. டி20 போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பது கணிப்பதற்கு மிகவும் கடினமாகும்.

ஏனென்றால் போட்டியின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் செல்லும். அன்றைய நாளில் எந்த அணி நன்றாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். எனினும் இந்திய அணி தற்போது டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த 40 போட்டிகளில் இந்திய அணி 35 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதனால் இம்முறை இந்திய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிகிறது. இந்திய அணி வெல்லும் வாய்ப்பு 75% வாய்ப்பு இருக்கலாம். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது பாகிஸ்தான் அணி. துபாயில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு அதிகமாக இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் சாஹின் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஷ் ரவுப் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் அந்த அணிக்கு பலமாக இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் பேட்டிங்கில் அதிரடி இளம் வீரர்கள் இணைந்து இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. குறிப்பாக சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் அந்த அணி தடுமாறியது. இதனால் பாகிஸ்தான் அணி வெல்லும் வாய்ப்பு வெறும் 40 சதவீதம் வரை தான் இருக்கின்றது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது இலங்கை அணி ஆகும். இலங்கை அணியில் சமீப காலமாக பேட்டிங்கில் அதிரடி வீரர்கள் நன்றாக விளையாடுகின்றனர். இதைப் போன்று பந்துவீச்சும் கொஞ்சம் மெருகேறி இருக்கிறது ஆனால் அண்மையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 80 ரன்களில் இலங்கை அணி ஆட்டம் இழந்தது.

இதனால் இலங்கை இன்னும் பலவீனமாக தான் இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால் ஆசிய கோப்பையை வெல்லும் அளவுக்கு இலங்கையிடம் பலம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இதனால் இலங்கை அணி வெல்லும் சதவீதம் வெறும் 30 மட்டுமே. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது ஆப்கானிஸ்தான் அணி.

ஆப்கானிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் தான். ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், நூர் அஹமது, நபி உள்ளிட்ட வீரர்கள் பந்துவீச்சு படையை பலமாக்குகின்றனர். அதேபோன்று பேட்டிங்கிலும் குர்பாஸ், அஸ்மதுல்லா உமர் சாய் போன்ற வீரர்கள் நன்றாக விளையாடி வருகின்றனர். எனினும் அவர்களுக்கு அனுபவம் மட்டும் தான் ஒரு குறையாக இருக்கின்றது.

பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அன்றைய நாளில் ஆப்கானிஸ்தான் அணி நினைத்தால் எந்த பெரிய அணியை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும். எனினும் அனுபவம் இன்மை என்பது ஒரு பெரிய குறையாக இருப்பதால் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு வெறும் 25% ஆக தான் உள்ளது. இந்த அணிகளைத் தவிர ஹாங்காங், ஓமன் மற்றும் யுஏஇ ஆகிய அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்பது மிகவும் குறைவாக தான் இருக்கின்றது.

Story first published: Sunday, September 7, 2025, 16:18 [IST]
Other articles published on Sep 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+