For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பையில் விளையாடப்போகும் 6வது அணி எது...?

கோலாலம்பூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் யுனைடெட் அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இதில் ஆசியா கண்டத்தை சேர்ந்த 6 அணிகள் பங்குபெறவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி தொடரில் ஆறாவது அணியாக பங்கேற்கும் அணியை தேர்ந்தெடுக்கும் தகுதிச்சுற்று போட்டிகள் நாளை முதல் மலேசியாவில் தொடங்குகின்றன.

தகுதி சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இறுதி போட்டியில் வெல்லும் அணி ஆறாவது அணியாக ஆசிய கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ளும்.

தகுதி சுற்று போட்டிகளில் ஓமன், ஹாங்காங், மலேசியா, யுனைடெட் அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன. கடந்த முறை 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட்ட ஆசிய கோப்பை போட்டிகள் இந்த முறை 50 ஓவர் போட்டிகளாக நடத்தபடுகிறது.

இப்போட்டி தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.






Story first published: Tuesday, August 28, 2018, 9:24 [IST]
Other articles published on Aug 28, 2018
English summary
Asia cup qualifier matches will start tomorrow
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+