For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்க்கவே அசிங்கமா இருக்கு.. 3 அல்வா கேட்ச்களை விட்ட இந்திய வீரர்கள்.. நேபாளத்துக்கு செம லக்

ஃகேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் மோசமாக ஃபீல்டிங் செய்து வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் போட்டியில் பேட்ஸ்மேன்கள் பயிற்சி பெற்றதால் பந்துவீச்சாளர்களுக்கு போதிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக இந்த முடிவு எடுத்ததாக ரோகித் சர்மா கூறினார்.

Asia cup - 3 catch missed by indian cricketers including virat kohli un India Nepal match

நேபாள் அணியுடைய பேட்டிங் மிகவும் பலம் குன்றிய ஒன்று. இதனால் இந்தியா நேபாள் அணியை விரைவாக சுருட்டி விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் இன்று வேண்டா வெறுப்பாக கிரிக்கெட் விளையாடுவது போல் இருக்கிறார்கள். யாரிடமும் எந்த பையரும் இல்லை. செத்தவன் கையில் பாக்கு கொடுத்தது போல் இந்திய வீரர்கள் நின்றனர்.

ஆட்டத்தின் முதல் ஓவரில் முகமது சமி வீசிய கடைசி பந்து தொடக்க வீரர் சேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லீப்பில் என்ற ஸ்ரேயாஸ் ஐயர் கோட்டை விட்டார். இதனை அடுத்து போட்டியின் இரண்டாவது ஓவரில் முகமது சிராஜ் வீசிய முதல் பந்தில் ஆசிப் ஷேக் கொடுத்த அல்வா கேட்சை விராட் கோலி சாட் கவரில் கோட்டை விட்டார்.

இதனை ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதேபோன்று விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் ஒரு கேச்சை தவறவிட்டார். இதன் மூலம் மூன்று கேட்சுகளை இந்திய அணி வீரர்கள் கோட்டை விட்டதால், அது நேபாள் அணிக்கு சரியான தெம்பை கொடுத்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு இது நமது நாள் என்பது போல் அதிரடியாக விளையாட தொடங்கினர். குறிப்பாக சிராஜ் ஓவரில் சிக்ஸர் பவுண்டரி என நேபாள் வீரர்கள் அடிக்க எட்டு ஓவரில் எல்லாம் நேபாள் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது.

நேபாள் அணி ஐம்பது ரன்கள் எல்லாம் சுருண்டு விடும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மோசமான பில்டிங் காரணமாக நேபாள் அணி தற்போது அதிரடியாக விளையாடி வருகிறது.
இதனை கொஞ்சம் கூட இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய ஷாக் ஆக அமைந்திருக்கிறது. விராட் கோலி கேட்ச் தவற விட்டதால் அவரை சோக்லி என கிண்டல் செய்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Monday, September 4, 2023, 15:57 [IST]
Other articles published on Sep 4, 2023
English summary
Asia cup - 3 catch missed by indian cricketers including virat kohli un India Nepal match பார்க்கவே அசிங்கமா இருக்கு.. 3 அல்வா கேட்ச்களை விட்ட இந்திய வீரர்கள்.. நேபாளத்துக்கு செம லக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+