ஆசிய கோப்பை: இலங்கையை வென்றது பங்களாதேஷ்.. ஹைலைட்ஸ்!
துபாய் : ஆசிய கோப்பையின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.. இதில் பங்களாதேஷ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இப்போட்டியில் நடந்த டாப் 5 நிகழ்வுகள் இதோ :
1 மலிங்காவின் அதிரடி தொடக்கம்
ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இலங்கை அணிக்காக களமிறங்கிய மலிங்கா மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதனை நிறைவேற்றும்வகையில் அவர் நேற்று மிக சிறப்பாக பந்துவீசினார். முதலாவது ஓவரிலேயே பங்களாதேஷ் அணியின் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் அவர் 10 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

2 முஷ்பிகுர் ரஹீம் அபார சதம்
பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நேற்றைய போட்டியில் தனது வாழ்வின் சிறந்த இன்னிங்சை ஆடினார் என்றால் மிகையில்லை. அவர் நேற்றைய போட்டியில் 144 ரன்களை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் இதுவே அவரது அதிகபட்சம்.
3 முகமத் மிதுன் அரைசதம்
பங்களாதேஷ் அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்த போது மிதுன் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மூன்றாவது விக்கெட்டிற்கு ரஹீமுடன் இணைந்து 133 ரன்களை சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

4 பங்களாதேஷின் அசத்தல் பந்துவீச்சு
பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசினர். கேப்டன் மொர்தசா மற்றும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் இணைந்து இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை வீழ்த்தினர். தரங்கா அதிரடியாக ஆரம்பித்த போதிலும் அவரால் பெரிய ரன்கள் அடிக்கவிடாமல் அவரது விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனையாகும்.
5 நெகிழ வைத்த தமீம் இக்பால்
பங்களாதேஷ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தமீம் இக்பால் இரண்டாவது ஓவரில் முடிவில் கையில் காயம் ஏற்பட்டு களத்தை விட்டு வெளியேறினார். ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. கடைசி விக்கெட்டாக மீண்டும் கலமிறங்கினார் தமீம் இக்பால். அவர் கையுறையை கிழித்து தனது அடிபட்ட கையில் அணிந்திருந்தார். மறுமுனையில் விளையாடிய ரஹீம் அதிரடியாக ஆடி கடைசி விக்கெட்டிற்கு 32 ரன்களை சேர்த்தார். தமீம் இக்பாலின் இந்த செயல் ரசிகர்களை நெகிழச்செய்தது. இந்திய வீரர் கும்ப்ளே ஒருமுறை தாடையில் அடிபட்டு தலையில் கட்டுடன் பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, September 16, 2018, 15:24 [IST]
Other articles published on Sep 16, 2018


Click it and Unblock the Notifications