Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: மொக்கை வாங்கிய பாகிஸ்தான்.. நடுவர் Andy Pycroft-ஐ மாற்ற மறுப்பு.. வேறு வழியின்றி விளையாடும் பாக்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டி நடுவரான ஆண்டி பயகிராப்ட் மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை ஏற்க மாட்டோம் என ஐசிசி உறுதியாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க மைதானத்திற்கு வந்துள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தான் நடத்திய நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது பாகிஸ்தான் மிகப்பெரிய மொக்கை ஒன்றை வாங்கிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்கவில்லை.இதற்கு காரணம் போட்டி நடுவரான ஆண்டி பயகிராப்ட் தெரிவித்த அறிவுறுத்தல் தான் என்று கூறப்பட்டது.

Pak vs UAE

இதனால் ஜிம்பாப்வே சேர்ந்த போட்டி நடுவரான ஆண்டி பயகிராப்டை மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. நாங்கள் விளையாடும் போட்டியில் ஆண்டி பயகிராப்ட் தொடர்ந்தால் நாங்கள் யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி யு ஏ இ அணிக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணித்தால் தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 250 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய நேரப்படி ஏழு முப்பது மணிக்கு டாஸ் போடப்பட வேண்டும். ஆனால் போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டது. ஆண்டி பயகிராஃப்ட் மாற்றுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கடைசி கட்ட பேச்சு வார்த்தையில் ஐசிசி இடம் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்கு வழியே இல்லை என்று ஐ சி சி கைவிரித்துவிட்டது. இதனால் மொக்கை வாங்கிய பாகிஸ்தான் வேறு வழியின்றி தற்போது மைதானத்திற்கு வந்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் இந்த அவமானம் பாகிஸ்தானுக்கு தேவையா என்று கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். இதனை அடுத்து இந்த போட்டி இந்திய நேரப்படி 9 மணிக்கு போட்டி தொடங்கப்படும். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 17, 2025, 20:35 [IST]
Other articles published on Sep 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+