Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - இலங்கை அணி அறிவிப்பு..காயமடைந்த வீரர்களுக்கு வாய்ப்பு.. ரிசர்வ் வீரராகிய EX கேப்டன்

கொழும்பு: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஷனாகா தலைமையிலான அணியில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பையை வென்று, ஆசியாவுக்கு ராஜாவாக திகழும் இலங்கை அணி, டி20 உலககோப்பையில் நேரடியாக சூப்பர் 6 சுற்றுக்கு செல்லாமல், தகுதிச் சுற்றில் விளையாடுவது காலத்தின் கோலம்.

இதனால், தகுதி சுற்றில் விளையாடிவிட்டு மெயின் சுற்றுக்கு செல்வதால், இலங்கை அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது.

டி20 உலககோப்பை

டி20 உலககோப்பை

எனினும் தகுதிச் சுற்றில் விளையாடுவதை பயிற்சியாக நினைத்து கொண்டு ஆசிய கோப்பையில் விளையாடியதை போன்று அதே வெறியுடன் விளையாடியனால், டி20 உலககோப்பையை இலங்கை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஆசிய கோப்பையில் களமிறங்கிய பெரும்பாலான வீரர்களை டி20 உலகக் கோப்பைக்கும் இலங்கை அணி தேர்வு செய்துள்ளது.

காயமடைந்த வீரர்களுக்கு இடம்

காயமடைந்த வீரர்களுக்கு இடம்

இதில், காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் களமிறங்காத சமீரா, லஹிரு திரிமானே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும் முழு உடல் தகுதி பெறவில்லை என்றால் மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

இதனிடையே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சந்திமால், பந்தாரா, நுவானிடு பெர்னான்டோ, சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவிக்கரமா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆசிய கோப்பையில் விளையாடிய மதிஷா பதிரானா, அஷிதா பெர்னான்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் 3வது சுழற்பந்துவீச்சாளராக ஜெஃப்ரி வெண்டர்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி விவரம்

இலங்கை அணி விவரம்

ஷனாகா (கேப்டன்), பனுகா ராஜபக்சா, ஷமிகா கருணரத்னே, குணதிலகா, தனஞ்செய்ய டி சில்வா, துஸ்மண்ட ஷமிரா, பதூம் நிசாங்கா, ஹசரங்கா, லஹிரு திருமானே, குசேல் மெண்டிஸ், மகீஷ் தீக்சணா, தில்சான் மதுசாங்கா, அசலங்கா, ஜெஃப்ரி வெண்டர்சே,பிராமுத் மதுசான்

ரிசர்வ் வீரர்கள் - தினேஷ் சந்திமால், பந்தாரா, நுவானிடு பெர்னான்டோ, சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவிக்கரமா

Story first published: Friday, September 16, 2022, 20:00 [IST]
Other articles published on Sep 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+