Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: கடைசி நேரத்தில் ஓடி வந்த நக்வி.. கார்னர் செய்த பிசிசிஐ.. ஐசிசி கூட்டத்தில் என்ன நடந்தது?

துபாய்: 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகியும், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இன்னும் கோப்பை வழங்கப்படாத விவகாரத்தை, துபாயில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக எழுப்பியது. இந்த இழுபறிக்குத் தீர்வு காண உதவுவதாக ஐசிசி முன்வந்துள்ள நிலையில், தேவைப்பட்டால் இதுகுறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவாதம் காரசாரமாக இல்லாமல், சுமூகமான முறையில் நடைபெற்றதாக 'கிரிக்பஸ்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கூட்டத்தில் பிசிசிஐ சார்பில் அதன் செயலாளர் தேவாஜித் சைகியா பங்கேற்றார். அவர், "ஆசியக் கோப்பை இந்திய அணிக்குச் சொந்தமானது, அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Asia Cup Controversy BCCI Puts Pressure on Mohsin Naqvi ICC Decides to Intervene and May Form Panel

தற்போது கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) அலுவலகத்தில் இருப்பதாகவும், ஏசிசி தலைவரான மோஷின் நக்வியின் நேரடி அனுமதியின்றி அதை அங்கிருந்து வெளியே எடுக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

கடைசி நிமிடம் வரை இந்தக் கூட்டத்தில் நக்வி பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் அவர் ஐசிசி தலைமையகத்திற்குத் திடீரென வருகை தந்தது, இந்த விவகாரத்தை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியது.

குழு அமைக்க ஐசிசி திட்டம்

இந்த விவகாரத்தில் ஒரு குழுவை அமைக்க ஐசிசி தயாராக இருப்பதாகத் தெரிகிறது. "வென்ற அணிக்குக் கோப்பையை வழங்காமல் தாமதப்படுத்துவது கிரிக்கெட் நிர்வாகத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்தும்" என்று பல ஐசிசி இயக்குநர்கள் கவலை தெரிவித்ததாகவும், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதில் அவர்கள் அனைவரும் ஒத்துப்போவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சர்ச்சையின் பின்னணி

செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்தே இந்தச் சர்ச்சை தொடங்கியது. இந்தியாவின் மறுப்பை அடுத்து, எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் கோப்பை அங்கிருந்து அகற்றப்பட்டது.

பிசிசிஐயின் உறுதியான நிலைப்பாடு

ஐசிசி கூட்டத்திற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்பே, கோப்பையை ஒப்படைக்குமாறு பிசிசிஐ, ஏசிசி தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதற்குச் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், "மோஷின் நக்வியிடமிருந்து நேரடியாகக் கோப்பையைப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. அப்படிப் பெறுவதாக இருந்திருந்தால், இறுதிப் போட்டியின் அன்றே நாங்கள் வாங்கியிருப்போம்" என்று சைகியா ஐசிசி கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளதால், கிரிக்கெட் உலகம் ஒரு தீர்விற்காகக் காத்திருக்கிறது. சாம்பியன்களாக இருந்தபோதிலும், இந்திய அணி தங்களது ஆசியக் கோப்பைக்காகக் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாகக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 8, 2025, 8:58 [IST]
Other articles published on Nov 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+