ஆசிய கோப்பையில் ஆல் டைம் பிளேயிங் லெவன் ? 3 இந்திய வீரர்களுக்கு இடம்
மும்பை : உலகக் கோப்பை தொடர்க்கு முன்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆசிய சாம்பியன் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை வரலாற்றில் சிறப்பாக செயல்பட்டவர்களை வைத்து ஆல் டைம் பிளேயிங் லெவன் தேர்வு செய்திருக்கிறோம். அது யார் என்று தற்போது பார்க்கலாம்.

ஆசிய கோப்பை ஆல் டைம் அணியில் தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்று இருக்கிறார். 21 இன்னிங்ஸில் 971 ரன்கள் அடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டியை 2012 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தான் விளையாடினார். சச்சினுக்கு ஜோடியாக ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஆசிய கோப்பை வரலாற்றிலே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
மூன்றாவது வீரராக சங்கக்கார தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 1075 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு சதமும் 8 அரை சதமும் அடங்கும் நான்காவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயுப் மாலிக் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் மொத்தமாக 786 ரன்களை அடித்திருக்கிறார். பந்துவீச்சிலும் 16 இன்னிங்ஸில் 12 விக்கெட்களை அவர் வீழ்த்தி இருக்கிறார்.
இதேபோன்று பாகிஸ்தான் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் ஐந்தாவது வீரராக இருக்கிறார். அவர் 13 இன்னிங்ஸில் 591 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.ஆறாவது இடத்தில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் சாகிபுல் ஹசன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் பேட்டிங்கில் பந்துவீச்சிலும் சிறந்து விளங்கி இருப்பதால் அவருக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் தோனி இடம் பெற்று இருக்கிறார்.
ஆசிய கோப்பையில் 648 ரன்கள் அடித்திருக்கும் தோனி ஒரு சதம் மூன்று அரை சதம் எடுத்திருக்கிறார். 8வது இடத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் இடம்பெற்றிருக்கிறார். அவர் 12 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 9வது இடத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வசீம் அக்ரம் இடம்பெற்றிருக்கிறார்.அவர் 12 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
பத்தாவது இடத்தில் இலங்கை வீரர் லஷீத் மலிங்கா இடம்பெற்றிருக்கிறார். அவர் 14 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 11வது இடத்தில் இலங்கை வீரர் முரளிதரன் இடம் பெற்றிருக்கிறார். அவர் 24 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications