For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாறு.. சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற அணி எது? சாம்பியன்ஸ் பட்டியல் இதோ

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரை அதிக முறை வென்ற அணி எது, ஒவ்வொரு தொடரிலும் யார் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

1984 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொடர் நடைபெற்ற வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிக முக்கியத்துவத்தை பெற்ற நிலையில் இந்தத் தொடரின் வடிவம் மாற்றப்பட்டது.

Asia cup cricket history - Here is the champions of every season

அதாவது எப்போதெல்லாம் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் இந்த தொடர் ஐம்பது ஓவர் போட்டிகளாகவும், டி20 உலக கோப்பை நடைபெறும் தருணத்தில் இந்த தொடர் t20 போட்டிகள் ஆகவும் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை இரண்டு முறை இந்த தொடர் t20 தொடர்களாக நடத்தப்பட்டு இருக்கிறது. 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
1988 ஆம் ஆண்டு இலங்கையை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 1990 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளிலும் இந்திய அணி ஆசிய கோப்பையை ஹாட்ரிக் முறையில் கைப்பற்றியது.1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கை அணியும் 2000 ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் பிறகு 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையும் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் இலங்கை அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியும் 2014 ஆம் ஆண்டு இலங்கை அணியும் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு இந்தியாவும் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இதனை அடுத்து கடைசியாக நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக ஏழு முறையும் இலங்கை அணி அதிகபட்சமாக ஆறுமுறையும் பாகிஸ்தான அணி இரண்டு முறையும் ஆசிய கோப்பையை வென்றிருக்கிறார்கள்.

Story first published: Saturday, August 26, 2023, 16:16 [IST]
Other articles published on Aug 26, 2023
English summary
Asia cup cricket history - Here is the champions of every season ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாறு.. சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற அணி எது? சாம்பியன்ஸ் பட்டியல் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+