ஆசியா கோப்பை கிரிக்கெட்-இன்று இந்தியா, வங்கதேசம் மோதல்

கால்பந்து களேபரத்தில் இந்தியா கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது சாதாரண செய்தியாகி விட்டது. இதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. அது, டுவென்டி 20 உலகக் கோப்பை மறறும் அதற்கு அடுத்து ஜிம்பாப்வேயில் நடந்த ஒரு நாள் தொடரில் படு தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணி மீது வெறுப்பில்தான் உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் தொடங்கியுள்ள ஆசியா கோப்பைப் போட்டியில் இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது.
கடைசியாக 1995ம் ஆண்டு ஆசியா கோப்பையை வென்றது இந்தியா. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கிறது ஆசியாவின் முக்கிய கிரிக்கெட் அணிகளில் ஒன்றான இந்தியா. இந்த நிலையில் இந்தத் தொடரிலாவது வென்று இழந்த பெருமையை காக்க முயலப் போகிறது இந்தியா.
இன்று பிற்பகல் தொடங்கிய பகலிரவுப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை எடுத்து ஆடி வருகிறது.
இந்திய அணி விவரம்...
கெளதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக், விராத் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, தோணி, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், பிரவீன் குமார், ஆசிஷ் நேஹ்ரா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications