
இலங்கை போராட்டம்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.இதன் காரணமாக ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கையில் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது.

பாதுகாப்பு பிரச்சினை
இருப்பினும் ஐந்து நாடுகள் பங்கேற்க கூடிய அளவிற்கு கிரிக்கெட் போட்டிகளை தற்போது தங்களால் நடத்த முடியாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கையை விரித்துள்ளது.
வீரர்கள் தங்க வைக்க போதிய ஹோட்டல்கள் வசதி, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு வசதி ஆகியவை தற்போது இலங்கை அரசால் தர முடியாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பின்வாங்கிய இந்தியா
இதனை அடுத்து நேற்று இரவு அவசர கூட்டம் இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் ஆசிய கிரிக்கெட்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.இதில் போட்டிகள் இந்தியாவில் நடத்த வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான அணி இந்தியாவுக்கு வர அரசியல் காரணங்களாக சிக்கல் இருப்பதால் பிசிசிஐ அந்த பொறுப்பில் இருந்து விலகியது.

எங்கு நடைபெறுகிறது
இதனை அடுத்து ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டு யுஏஇல் தான் ஆசிய கோப்பை போட்டிகள் 50 ஓவர் ஆட்டங்களாக நடைபெற்றன தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மீண்டும் ஆசிய போட்டி துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











