ஒழுங்கீனம் காரணமாக ஆசியா கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாத யுவராஜ் சிங்

இலங்கையில் வரும் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரைஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சச்சின் இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக கேட்டுக் கொண்டதால் ஓய்வு கொடுக்கப்பட்டது. அதேசமயம், யுவராஜ் சிங் அணிக்குப் பரிசீலிக்கப்படவே இல்லை. இதேபோல ஜிம்பாப்வே தொடரில் சொதப்பிய திணேஷ் கார்த்திக்,
முரளி விஜய், அமீத் மிஸ்ரா மற்றும் யூசுப் பதான் ஆகியோரும் நீக்கப்பட்டனர்.
யுவராஜ் சிங் நல்ல பார்மில் இல்லை. மேலும், கிரிக்கெட்டைத் தவிர வேறு விஷயங்களில்தான் அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார். நள்ளிரவு விருந்து நிகழ்ச்சிகளிலும், பேஷன் ஷோவிலும் அவர் அதிக நேரம் செலவழிக்கிறார். டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வியுற்ற பின்னர் அவர் உள்ளிட்ட வீரர்கள் மது அருந்தியதும், அதைத் தட்டிக் கேட்ட இந்திய ரசிகர்களை தாக்கியதும் கூட அவரது நீக்கத்திற்கு முக்கியக் காரணமாகும்.
இதுபோக, பெருத்துப் போய்காணப்படும் யுவராஜ் சிங் உடல் தகுதியுடன் இல்லாத காரணத்தாலும் அவரை தூக்கி விட்டனர்.
ஆசியா கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி
டோணி (கேப்டன்), ஷேவாக் (துணை கேப்டன்), கெளதம் கம்பீர், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், பிரவீன் குமார், ஜாகிர் கான், ஆசிஷ்நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, அசோக் திண்டா, ஆர்.அஸ்வின், செளரப் திவாரி.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications