Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன "பிட்ச்" கொடுத்தாலும் சரி, வாங்கிக்கிட்டு "கம்"முன்னு விளையாடுவோம்.. சொல்வது ரவி சாஸ்திரி!

பதுல்லா, வங்கதேசம்: ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடருக்காக வங்கதேசம் போயுள்ள இந்திய அணி, தனக்கு கிடைக்கும் பிட்ச் எப்படிப்பட்டது என்று கவலை கொள்ளாது. மாறாக கிடைக்கும் பிட்ச்சில் எப்படி விளையாட வேண்டுமோ, அப்படி விளையாடும் என்று இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஆசியா கோப்பைத் தொடரை வெற்றியுடன் இந்தியா தொடங்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணி பிட்ச் குறித்து அதிகம் கவலைப்படாது என்றும், கிடைக்கும் பிட்ச்சில் ஆட முயற்சிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளை முதல் ஆசியாக் கோப்பைப் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்த்து நாளை ஆடும். இது டுவென்டி 20 தொடராக மாற்றப்பட்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு போட்டியும் முக்கியம்

ஒவ்வொரு போட்டியும் முக்கியம்

இத்தொடர் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ஆசியாக் கோப்பைத் தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமாகும். அடுத்து உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளதால் இதில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெல்வது முக்கியமாகும்.

நன்றாக ஆடினால் வெல்லலாம்

நன்றாக ஆடினால் வெல்லலாம்

வெல்வதை வாடிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணத்துடன் ஆட வேண்டும். நன்றாக விளையாடினால் நிச்சயம் வெல்ல முடியும்.

பலத்தைப் பாருங்கள்

பலத்தைப் பாருங்கள்

நமது பலம் என்னவென்று உணர்ந்து தெளிந்து ஆட வேண்டும். முறையாக விளையாட வேண்டும். சிறப்பான முறையில் நேர்த்தியாக ஆடும்போது வெற்றி நிச்சயம் கைக்கு கிடைக்கும்.

அசமஞ்சமாக இருக்கக் கூடாது

அசமஞ்சமாக இருக்கக் கூடாது

அசமஞ்சமாக இருக்கக் கூடாது. அதேசமயம், அதீத நம்பிக்கையுடனும் ஆடக் கூடாது. நமது இயல்பான ஆட்டத்தை சரியான முறையில் உறுதியான முறையில் வேளிப்படுத்த வேண்டும் என்றார் சாஸ்திரி.

இரு தொடர் வெற்றிகள்

இரு தொடர் வெற்றிகள்

இந்தியா சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை 3-0 என்ற கணக்கில் துவம்சம் செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடந்த இலங்கைக்கு எதிரான டுவென்டி 20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது. எனவே நிறைய நம்பிக்கையுடன் வங்கதேசம் வந்துள்ளது.

பிட்ச் பிரச்சினையில்லை

பிட்ச் பிரச்சினையில்லை

இந்திய அணியைப் பொறுத்தவரை பிட்ச் பிரச்சினை இல்லை. எந்த வகையான பிட்ச்சாக அது இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. நல்ல கிரிக்கெட் ஆடவே நாங்கள் விரும்புகிறோம்.

யாராக இருந்தாலும் சரி

யாராக இருந்தாலும் சரி

நாங்கள் எதிர்த்து மோதுவது இலங்கையாக இருந்தாலும் சரி, வங்கதேசமாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த அணியாக இருந்தாலும் சரி சீரியஸாகவே நாங்கள் ஆடுவோம். உத்திகள் மாறலாம், ஆனால் உத்வேகம் மாறாது.

எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்

எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்

வங்கதேசத்துடன் முதல் போட்டியில் ஆடுகிறோம். வங்கதேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த அணி தற்போது நன்கு வளர்ந்து விட்டது. 90களிலிருந்து இங்கு நான் வந்து கொண்டுள்ளேன். அந்த அணியின் வளர்ச்சி என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

யாராக இருந்தாலும் வீழ்த்தும்

யாராக இருந்தாலும் வீழ்த்தும்

எந்த நாட்டு அணியாக இருந்தாலும் சரி வங்கதேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்தும் வகையில் வங்கதேசம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் சாஸ்திரி.

அதை அப்பவே மறந்தாச்சு

அதை அப்பவே மறந்தாச்சு

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஒரு நாள் தொடரை ஆடிய இ்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்றது குறித்த கேள்விக்கு சாஸ்திரி பதிலளிக்கையில், அது முடிந்து எட்டு மாதங்களாகி விட்டது. அதை நான் ஏற்கனவே மறந்து விட்டேன். அதற்குப் பிறகு நிறைய விளையாடி விட்டோம். கடந்த 2 வாரத்தில் நடந்தது குறித்து கேட்டால் மட்டும்தான் என்னால் பதிலளிக்க முடியும். அவ்வளவுதான் எனது ஞாபக சக்தி என்றார் சிரித்துக் கொண்டே.

அது சரி!

Story first published: Tuesday, February 23, 2016, 12:32 [IST]
Other articles published on Feb 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+