Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

82 சர்வதேச போட்டி vs 0 சர்வதேச போட்டி.. தொடரை நியாயமாக எதிர்கொண்ட இந்தியா.. ஏமாற்றிய பாக், இலங்கை

கொழும்பு : ஆசிய கோப்பை எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரில் இறுதிப்போட்டி வரை வந்த இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.
வளரும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடர், ஏ அணிகள் தொடர் என பல்வேறு போட்டிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் பொதுவாக எந்த வீரர் எல்லாம் அடுத்த தலைமுறை கிரிக்கெட்டில் சாதிக்கப் போகிறார்களோ அவர்களை தேர்வு செய்து விளையாட வைப்பது தான் எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரின் நோக்கமாகும். அந்த வகையில் இந்திய அணி இந்த தொடரில் முழுமையாக இளம் வீரர்களை வைத்து விளையாடியது. அதன் படி இந்த தொடரில் விளையாடிய இந்திய அணியின் ஒருவர் கூட சர்வதேச கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இல்லாதவர்.

Asia cup Emerging Players - Age and International caps experience average of every team

ஆனால் இந்த தொடரை கேலிக்கூத்தாக மற்ற அணிகள் மாற்றியது. இன்னும் சொல்லப்போனால் ஏதேனும் ஒரு அல்லது இரண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியின் விளையாடி பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த தொடரில் களம் இறக்கப்படலாம்.

விராட் கோலி ஆரம்ப காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு சர்வதேச போட்டிகள் விளையாடி அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எல்லாம் இதுபோன்ற எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடர்களில் விளையாடி இருக்கிறார். ஆனால் வங்கதேசம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் எல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்த வீரர்களைக் கொண்டு இந்தத் தொடரில் களமிறங்கியது.

குறிப்பாக வங்கதேச அணியில் 30 வயதான சௌமியா சர்க்கார் போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் பழம் தின்று கொட்டப்பட்ட வீரர்கள் எல்லாம் இந்த இளம் படையினருடன் விளையாடினார். இதில் அதிகபட்சமாக வங்கதேசத்தில் இடம்பெற்ற வீரர்களின் சர்வதேச அனுபவத்தை சேர்த்தால் அவர்கள் 251 போட்டிகளில் விளையாடி இருப்பார்கள். இதற்கு அடுத்தபடியாக இலங்கை அணியில் களமிறங்கிய இளம் வீரர்களின் சர்வதேச அனுபவம்190 போட்டியாகும்.

இதுவே ஆப்கானிஸ்தானை எடுத்துக்கொண்டால் 130 போட்டிகள் ஆகும். இறுதிப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்களின் சர்வதேச அனுபவம் 82 போட்டிகள் ஆகும்.ஆனால் இந்தியாவின் அனுபவம் வெறும் ஜீரோ தான். இதே போன்று வயது சராசரியை பார்த்தால் இலங்கை அணி வயது 25.8 ஆகும். ஆப்கானிஸ்தானின் வயது 24.6 ஆகும் .பாகிஸ்தானுடைய வயது 23.3 ஆகும்.

வங்கதேச அணியினருடைய வயது 23.2 ஆகும். இந்த தொடரில் இந்தியாவில் வீரர்கள் மீது தான் 20.8 என்ற அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறது. இப்படி இருக்க இந்த தொடரில் களம் இறங்கிய அனைத்து அணிகளையும் இந்தியா தோற்கடித்து இருக்கிறது. பலம் வாய்ந்த பாகிஸ்தானை இந்திய அணி லீக் ஆட்டத்தில் தோற்கடித்தது. இந்த தொடரில் இந்தியா தோல்வியை தழுவினாலும் உண்மையான வெற்றி இந்த இளம் சிங்கங்களுக்கு தான் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, July 23, 2023, 23:00 [IST]
Other articles published on Jul 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+