ஆசிய கோப்பை எமர்ஜிங் தொடர்.. பைனலில் இந்தியா வெல்ல 353 ரன்கள் இலக்கு.. பாகிஸ்தான் அபார ஆட்டம்
கொழும்பு : ஆசிய கோப்பை எமர்ஜிங் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் துல் , பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, பாகிஸ்தான் அணியின் சர்வதேச அனுபவம் உடைய வீரர் சயூப் அயுப், ஹங்கர்கேகர் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், அது நோ பால் என்று நடுவர் அறிவித்தார். இதனையடுத்து, சயிம் ஆயுபும், ஃபர்கானும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 121 ரன்கள் சேர்த்தது. உமைர் யூசுப் பொறுப்பாக விளையாடி 35 ரன்கள் சேர்த்து ரியான் பராக் பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார். இதே போன்று காசிம் அக்ரம் டக் அவுட்டாகியும், கேப்டன் ஹாரிஸ் 2 ரன்களில் வெளியேறியும் பாகிஸ்தானுக்கு லேசான சரிவு ஏற்பட்டது.
ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் அபாரமாக விளையாடிய தாயாப் தாஹிர் அதிரடியாக விளையாடி இந்திய அணி பந்துவீச்சை சிதறடித்தார். 71 பந்துகளை எதிர்கொண்ட அவர் 108 ரன்களை சேர்த்தார். இதில் 4 சிக்சர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும்
இறுதியில் முபஷிர் கான் 35 ரன்கள் சேர்க்க, முகமது வசீம் 17 ரன்கள் எடுத்தார். இதனால் பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி பந்துவீச்சில் ரியான் பராக் 2 விக்கெட்டுகளையும், ஹங்கர்கேகர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications