Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

58 ரன்களுக்கு 5 விக்கெட்.. இலங்கை கொடுத்த தரமான கம்பெக்..20 பந்துகளில் மாறிய ஆட்டம்..ராஜபக்சா அபாரம்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் ராஜபக்சா அரைசதம் அடித்தார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் நஷிம் ஷா, ஷதாப் கான் ஆகியோர் அணிக்கு திரும்பினர்.

இதனையடுத்து, இலங்கை அணி வீரர்கள் குசேல் மெண்டிஸ் மற்றும் நிசாங்கா ஆகியோர் களமிறங்கினர்.

பாகிஸ்தான் அபாரம்

பாகிஸ்தான் அபாரம்

முதல் ஓவர் வீசிய நஷிம் ஷா அனல் பறக்கும் வகையில் பந்துவீசினார். ஆட்டத்தின் 3வது பந்தில் நஷிம் குசேல் மெண்டிசின் ஸ்டம்பை பதம் பார்த்தார். இதனையடுத்து நிசாங்கா 8 ரன்ககளிலும், குணதிலகா 1 ரன்களிலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி சிங்க பாய்ச்சலை வெளிப்படுத்தியது,

58 ரன்களுக்கு 5 விக்கெட்

58 ரன்களுக்கு 5 விக்கெட்

கடுமையாக போராடிய தனஞ்செய்யா 28 ரன்களும், கேப்டன் ஷனாகா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து பாகிஸ்தான் எளிதாக வென்றுவிடும் என நினைத்த நிலையில் தான், ஆட்டம் அப்படியே தலைக்கீழ் மாறியது. ஐபிஎல் வீரர் பனுகா ராஜபக்சா முதலில் நிதானமாக விளையாட, பிறகு அதிரடியை காட்டினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதே போன்று, இலங்கை ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் பவுண்டரிகளை விரட்ட இலங்கை அணியின் ஸ்கோர் நம்ம ஊர் பெட்ரோல் விலை போல் கிடுகிடுவென உயர்ந்தது. ஹசரங்கா 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். மறுபுறம் ராஜபக்சா 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதே போன்று பாகிஸ்தான் வீரர்களும் ஃபில்டிங்கில் படுமோசமாக செயல்பட்டனர். கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை, சிக்சராக மாற்றிய காமெடி எல்லாம் அரங்கேறியது.

ராஜபக்சா 71 ரன்கள்

ராஜபக்சா 71 ரன்கள்

இறுதியில் கருணரத்னே ராஜபக்சாவுக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இதனால் மறுமுனையில் ராஜபக்சா அதிரடியை காட்டினார். குறிப்பாக கடைசி 5 ஓவரில் 53 ரன்கள் விளாசப்பட்டது. இதில் கடைசி 2 பந்துகள் 10 ரன்கள் அடிக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. ராஜபக்சா 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.

Story first published: Sunday, September 11, 2022, 21:39 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+