For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க டீமுக்கு சப்போர்ட் பண்ணனும்னு வந்தோம் ஆனா இரக்கமே காட்டாமல்.. மனமுடைந்த இலங்கை ரசிகர்கள்!

கொழும்பு : இலங்கை அணி ஆசிய கோப்பை உறுதிப் போட்டியில் பரிதாபமான நிலையில் தோல்வி அடைந்துள்ளது.

இலங்கை அணி 15.2 ஓவர்களில் எல்லாம் 10 க்கெட்களை இழந்து இந்திய 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Asia Cup Final 2023 : Fans disappoint over Sri Lankas worst performance

இந்தப் போட்டி நடைபெறும் கொழும்பு மைதானத்தில் இதே ஆசிய கோப்பை தொடரில் மற்ற அணிகள் ஆடிய போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகமாக வரவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு கூட ரசிகர் கூட்டம் குறைவாகவே இருந்தது.

அதற்கு காரணம், இலங்கை மக்கள் மற்ற அணிகளின் போட்டிகளை காண விரும்பாததுதான். ஆனால், பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய சூப்பர் 4 போட்டியை காண அரங்கம் நிறையும் அளவுக்கு ரசிகர் கூட்டம் வந்திருந்தது. அந்தப் போட்டியில் இலங்கை வென்று ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வலுவான இந்திய அணியை சந்திக்க வந்தது இலங்கை அணி. தங்கள் அணி மீது முழு நம்பிக்கை வைத்திருந்த இலங்கை ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண திரண்டார்கள். இந்திய ரசிகர்களை விட சொந்த மண்ணில் ஆடும் இலங்கை அணிக்கு ஆதரவு கொடுக்க கொழும்பு மக்கள் திரண்டு வந்தனர்.

ஆனால், இலங்கை அணி சில ஓவர்களில் எல்லாம் 12 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது. அதை எதிர்பார்க்காத ரசிகர்கள் மனம் உடைந்து போனார்கள். பலர் அதிர்ச்சியில் உறைந்து இருக்க, சிலர் கண் கலங்கி மைதானத்தை விட்டு அப்போதே வெளியேறினர்.

இந்திய அணி 6 விக்கெட் வீழ்ந்த பின் கொஞ்சம் இரக்கம் காட்டி வாஷிங்க்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோருக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் பந்து வீச அழைக்கும் என எதிர்பார்த்த இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அதிக விக்கெட் எடுத்த சிராஜை தொடர்ந்து பயன்படுத்தினார். சிராஜ் 6 விக்கெட் சாய்த்தார். அடுத்து வேகப் பந்துவீச்சு நன்றாக வேலை செய்வதை உணர்ந்து தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை பந்து வீச அழைத்தார். அவர் 3 விக்கெட் வீழ்த்த இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சியுடனும், கண்ணீருடனும் மைதானத்தை விட்டு அப்போதே வெளியேறினர்.

Story first published: Sunday, September 17, 2023, 18:27 [IST]
Other articles published on Sep 17, 2023
English summary
Fans disappoint over Sri Lanka's worst performance in Asia cup 2023 final. Some started crying during the match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+