Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் பைனலில் இருந்து வெளியேறும் சயிம் அயூப்? ரன்னே எடுக்காமல் அவுட் ஆவதில் மன்னன்

துபாய்: 2025 ஆசிய கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில், அதிரடி இளம் வீரர் சயிம் அயூப் நீக்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இந்தத் தொடர் முழுவதும் பேட்டிங்கில் படுமோசமாகச் சொதப்பி வருவதே இதற்குக் காரணம்.

இடது கை பேட்ஸ்மேனான சயிம் அயூப், இந்தத் தொடரில் பாகிஸ்தான் ஆடிய ஆறு போட்டிகளிலும் களமிறங்கியுள்ளார். ஆனால், அவரால் வெறும் 23 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் 21 ரன்கள், சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக வந்தவை. அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், அவர் ஆடிய ஆறு போட்டிகளில் நான்கு முறை 'டக் அவுட்' ஆகியுள்ளார்.

Asia Cup IND vs PAK Final Saim Ayub Likely to be Dropped from Pakistan Playing XI Pakistan s Predicted Playing 11

ரன்னே எடுக்காமல் அவுட் ஆவதில் மன்னன் என நிரூபித்த சயிம் அயூப்பை முக்கியமான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலும் ஆட விடக்கூடாது என பாகிஸ்தான் கூடாரத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. லீக் சுற்றில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி, மூன்று முறையும் டக் அவுட் ஆனதால், சூப்பர் 4 சுற்றில் அவர் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால், அங்கும் அவரது சொதப்பல் ஆட்டம் தொடர்ந்தது.

மாற்று வீரர் யார்?

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், சயிம் அயூப்பை நீக்க பாகிஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்தால், அவருக்குப் பதிலாக ஹசன் நவாஸ் அணிக்குள் வர வாய்ப்புள்ளது. ஹசன் நவாஸ் இதுவரை 22 டி20 போட்டிகளில் விளையாடி, 158.09 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டுடன் 449 ரன்களைக் குவித்துள்ளார்.

ஆனால், சயிம் அயூப்பை நீக்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. காரணம், அவர் பேட்டிங்கில் சொதப்பினாலும், இந்தத் தொடரில் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு, இதுவரை 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல் ரவுண்டர் என்ற அடையாளத்தால் அவர் தப்புவார் என்கிறார்கள்.

பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்குமா?

2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அதே அணியுடன், கேப்டன் சல்மான் அலி அகா களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், அணியின் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான முகமது ஹாரிஸ், தொடரின் முதல் போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்தார். ஆனால், இந்தியாவுக்கு எதிராகச் சொதப்பியதால், பின்வரிசைக்குத் தள்ளப்பட்டார். வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த 31 ரன்கள், மீண்டும் அவருக்குப் பேட்டிங் வரிசையில் பதவி உயர்வைக் கொடுக்கலாம்.

அதேபோல, இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஆல்-ரவுண்டர் ஹுசைன் தலாத் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. கேப்டன் சல்மான் அலி அகாவும் இந்த இறுதிப் போட்டியில் பொறுப்பேற்று, ஒரு மேட்ச்-வின்னிங் இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான உத்தேச பாகிஸ்தான் அணி (Pakistan's Playing XI):
சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபக்கர் ஜமான், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), சயிம் அயூப் / ஹசன் நவாஸ், சல்மான் அலி அகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.

Story first published: Saturday, September 27, 2025, 17:40 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+