Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஆசிய கோப்பையை பூட்டி வையுங்க.. நான் இல்லாமல் இந்தியாவுக்கு கொடுக்க கூடாது”.. எல்லை மீறிய நக்வி

துபாய்: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவருமான மோஷின் நக்வியின் கடும் உத்தரவின் பேரில், ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், தான் இல்லாதபோது எந்த காரணத்தை கொண்டும் ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு அளிக்கக் கூடாது என ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்ற தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட வேண்டிய கோப்பை, பல வாரங்கள் கடந்தும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.

செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில்தான் இந்தச் சர்ச்சையின் முதல் பொறி கிளம்பியது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், இந்தத் தொடர் முழுவதும் இரு அணி வீரர்களுக்கு இடையேயான உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. பரிசளிப்பு விழாவில் இந்திய அணி கோப்பையைப் பெற மறுத்ததால் கோபமடைந்த மோஷின் நக்வி, கோப்பையைத் தானே பரிசளிப்பு மேடையிலிருந்து எடுத்துச் சென்றார்.

Asia Cup IND vs PAK Pakistan Board Chairman Locks Asia Cup in Dubai Office Mohsin Naqvi s Order Sparks Controversy

நக்வியின் நிபந்தனை

மோஷின் நக்விக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இன்றுவரை, ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஏசிசி அலுவலகத்தில்தான் உள்ளது. நக்வியின் நேரடி அனுமதி மற்றும் அவர் நேரில் இல்லாமல், கோப்பையை எங்கும் நகர்த்தவோ அல்லது யாரிடமும் ஒப்படைக்கவோ கூடாது என்று தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

மேலும், "எப்போது நடந்தாலும், இந்திய அணிக்கோ அல்லது பிசிசிஐக்கோ கோப்பையைத் தாம் தான் நேரில் வழங்குவேன் என்று நக்வி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்" என்றும் கூறினர்.

ஐசிசி-யிடம் முறையிட பிசிசிஐ திட்டம்!

பிசிசிஐ இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், வரவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் இந்த விவகாரத்தை முறையாக எழுப்பத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில், நக்வியின் செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பது அல்லது ஐசிசி இயக்குநர் பதவியில் இருந்து அவரை நீக்கக் கோருவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, October 11, 2025, 7:21 [IST]
Other articles published on Oct 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+