அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு.. இலங்கைக்கு சாதகமான தொடக்கம்
துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணி மோதுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Recommended Video
சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை அணி, அதே தெம்புடன் இந்தியாவை எதிர்கொள்கிறது.
ஆனால், இந்திய அணி பாகிஸ்தானுடன் தோல்வி அடைந்ததால் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாவின் தவறான பிளேயிங் லெவனே காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

டாஸ்
துபாய் ஆடுகளத்தில் சேஸிங் செய்யும் அணிக்கே சாதகமான முடிவு ஏற்படுகிறது. இந்த நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு செய்வதாக அறிவித்தார். இது குறித்து பேசிய அவர் சேஸிங் செய்த அணிகளே கடைசி 3 போட்டியில் வெற்றி பெற்றது. எங்கள் பேட்ஸ்மேன்கள் போட்டியை அணுகிய விதம் சிறப்பாக உள்ளது. இதனை அவர்கள் தொடர்வார்கள் என நம்புகிறேன்.

ரோகித் கருத்து
இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நாங்களும் பந்துவீச தான் இருந்தோம். இரண்டாவது பேட்டிங் செய்யும் போது சாதகமான சூழல் நிலவுகிறது. உலகக் கோப்பை போட்டிகளும் இது போன்ற கடினமான சூழலில் தான் விளையாடப்படுகிறது. தற்போது இந்த தொடர் எங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது.

அஸ்வினுக்கு வாய்ப்பு
எதிரணி இலக்கை துரத்தும் போது பல்வேறு விசயங்களை கவனித்து கொண்ட செயல்பட வேண்டும். பனிப்பொழிவும் இருக்கிறது. இதனால் எப்படி சரியான லைன் மற்றும் லெங்கித் பந்துவீசுவது என்பது குறித்து முடிவு பந்துவீச்சாளர்கள் கற்று கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டத்தில் ரவி பிஸ்னாய்க்கு பதில் நாங்கள் அஸ்வினை சேர்த்துள்ளோம் என்று ரோகித் கூறினார். இலங்கை அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிளேயிங் லெவன்
இந்திய அணி, 1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6,ரிஷப் பண்ட், 7. தீபக் ஹூடா, 8, புவனேஸ்வர் குமார், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, அஸ்வின், 11, சாஹல்


Click it and Unblock the Notifications