Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நைனா, இங்கே 2 லட்சம் கொசு இருக்கு... பீதியைக் கிளப்பிய ரெய்னா!

டாக்கா: வங்கதேசம் போயுள்ள இந்திய அணி அங்கு கொசுத் தொல்லையில் சிக்கித் தவித்து வருகிறதாம். கொசு அடிப்பதா அல்லது போட்டிக்கான உத்திகளை வகுப்பது குறித்து யோசிப்பதா என்று தெரியாமல் புலம்பிக் கொண்டுள்ளனராம் இந்திய வீரர்கள்.

ஆசியா கோப்பைப் போட்டித் தொடர் வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் வங்கதேசம் வந்துள்ளன.

வந்த இடத்தில் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது இந்தியா. முதலில் போக்குவரத்து நெரிசல் குறித்து வீரர்கள் புலம்பியிருந்தனர். இப்போது கொசுத் தொல்லை குறித்து இந்திய வீரர்கள் கடுப்புடன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

பயங்கர கொசுத் தொல்லை

பயங்கர கொசுத் தொல்லை

டாக்காவில் பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்கள், கொசுக்களின் படையெடுப்பால் சரியாக பேட் செய்ய முடியாமல், பவுலிங் செய்ய முடியாமல் கடுப்பாகி விட்டனராம்.

2 லட்சம் கொசு இருக்க

2 லட்சம் கொசு இருக்க

இதுகுறித்து ஏபிபி நியூஸுக்கு சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டியில், இங்கு கிட்டத்தட்ட 2 லட்சம் கொசுக்களவாது இருக்கும் என்று கூறினார்.

தப்பிக்க பெரும்பாடா இருக்கு

தப்பிக்க பெரும்பாடா இருக்கு

ஷிகர் தவான் கூறுகையில் இந்த கொசுக்களால் எங்களால் பேட் செய்யவே முடியவில்லை. அதை விட இவற்றிடம் கடிபடாமல் தப்புவது பெரும் பாடாக இருக்கிறது என்றார்.

டவலை எடு.. தலையில போடு

டவலை எடு.. தலையில போடு

விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் போன்றோர் பெரிய துண்டை எடுத்து உடல் முழுக்க மூடியபடி காணப்பட்டனர். அப்படியும் சில பல கொசுக்கள் அவர்களை கடிக்கவே செய்ததாம்.

சிறப்புக் குழு போட்டும் வேஸ்ட்

சிறப்புக் குழு போட்டும் வேஸ்ட்

மைதானங்களில் பிரகாசமான வெள்ள விளக்குகள் போடப்படுவதால் கொசுக்கள், பூச்சிகள் அதிகம் இருப்பது சகஜம்தான். ஆனால் இதை ஒழிக்க சிறப்பு வசதிகளும், ஏற்பாடுகளும் வந்து விட்டன. ஆனால் அதை டாக்கா மாநகராட்சி நிர்வாகம் சரிவர செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக சிறப்புக் குழுக்கள் வேறு உள்ளதாம்.

2011 உலகக் கோப்பை

2011 உலகக் கோப்பை

2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது கொசுத் தொல்லையை ஒழிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவற்றின் செயல்பாடு சரியில்லை என்று சொல்கிறார்கள்.

கொசு மருந்து அடித்தும் கூட

கொசு மருந்து அடித்தும் கூட

இந்திய அணி தனது வலைப் பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு ஸ்டேடிய நிர்வாகிகள் கொசு மருந்து அடித்துள்ளனர். அப்படியும் கூட கொசுக்கள் சாகவில்லையாம்.

நாடு முழுவதும் கொசுக்களின் நாட்டாமை

நாடு முழுவதும் கொசுக்களின் நாட்டாமை

வங்கதேசம் முழுவதுமே கொசுத்தொல்லை சகஜமாம். அங்கு போகும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கூட தங்களது நாட்டவரை எச்சரிக்கும் அளவுக்கு கொசுத் தொல்லை மிகுந்த நாடு வங்கதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 6ம் தேதி வரை

மார்ச் 6ம் தேதி வரை

இன்று தொடங்கும் ஆசியாக் கோப்பைப் போட்டிகள் மார்ச் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 24, 2016, 18:24 [IST]
Other articles published on Feb 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+