Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: பாகிஸ்தான் அணியின் தந்தை இவரா? பேட்டிங் ஆர்டர் இப்படி தான் தேர்வு செய்யப்படுதா? தெறிக்கும் மீம்ஸ்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிருக்கிறது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பைனலுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இதனால் நடப்பு தொடரின் மூன்றாவது முறையாக இரு அணிகளும் பல பரிட்சை நடத்த உள்ளன.

அது மட்டும் இல்லாமல் 41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் பைனலில் மோதுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் சம்பிரதாய ஆட்டமாக இந்தியா இன்று இலங்கையை தனது கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் மோதுகிறது.

Asia cup memes

இந்த போட்டிக்கு முன்பு இணையத்தில் ஆசிய கோப்பை தொடர்பாக பல்வேறு மீம்ஸ் களை போட்டு ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தங்களுடைய பேட்டிங் வரிசையை முற்றிலும் மாற்றியது. எந்த வீரர் எந்த இடத்தில் வருவார் என்று தெரியவே இல்லை.

யார் யாரோ வந்து சென்றார்கள். இதனால் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய இருந்த சாம்சன் கடைசிவரை வரவே இல்லை. இதனை கிண்டல் செய்யும் விதமாக கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசையை இப்படித்தான் தேர்வு செய்கிறார் என்று மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்திருக்கின்றனர். அதாவது 90 கிட்ஸ் தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது பேட்டிங் வரிசையில் தேர்வு செய்வதற்காக மணலில் நம்பர் போட்டு கோடு போட்டு இருப்பார்கள்.

அதனை மறைத்துக் கொண்டு விளையாடும் நபர்களை தொட சொல்வார்கள். அதில் யார் எந்த நம்பரை தொடுகிறார்களோ அந்த வரிசையில் களமிறங்க வேண்டும். இப்படித்தான் இந்திய அணியிலும் செய்யப்படுகிறதா என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் வீரர் சையும் அயூப் டக் ஆனார்.

Asia cup memes

இதன்மூலம் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் 6 இன்னிங்ஸில் நான்காவது முறையாக அவர் டக் அவுட் ஆனதால் இதனை கிண்டல் செய்யும் விதமாக அவர் வாங்கிய நான்கு டக்கையும் போட்டு ஆடி நிறுவனத்தின் புதிய விளம்பர தூதர் இவர்தான் என்று கிண்டல் அடித்திருக்கிறார்கள். ஏனென்றால் ஆடி நிறுவனத்தின் லோகோவில் இது போன்று தான் சக்கரம் இருக்கும்.

Asia cup memes

இதே போன்று, இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளதை விமர்சித்து ஒரு மீம்ஸ் போடப்பட்டிருக்கிறது. அதில் சச்சின், விராட் கோலி ஆகியோருக்கு பிறகு தற்போது பாகிஸ்தான் அணியின் தந்தையாக அபிஷேக்சர்மா இருப்பதாகவும் பாகிஸ்தான் பவுலரான ஷாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவுப்பை குழந்தைகள் போல் கையில் வைத்துக்கொண்டு அவர் இருப்பது போல் ஒரு மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

Story first published: Friday, September 26, 2025, 10:46 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+