200 சிக்ஸர்கள் விளாசிய ஒரே "தலைவன்".. நம்ம டோணி தான்!
மிர்பூர்: 200 சிக்ஸர்கள் விளாசிய முதல் கேப்டன் என்ற பெருமை டோணிக்குக் கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆசியக் கோப்பைப் போட்டியின்போதுதான் இந்த "சம்பவம்" நடந்தது.
டோணிக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் உள்ளார். அவர் 376 இன்னிங்ஸ்களில் 171 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக 200 சிக்ஸர்களை விளாசிய ஒரே கேப்டனாக தற்போது டோணி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.

315 இன்னிங்ஸ்களில்
315 இன்னிங்ஸ்களில் டோணி இந்த சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்கியை விட குறைந்த அளவிலான போட்டிகளே அவருக்கு இதற்கு தேவைப்பட்டுள்ளது.

அதிக வெற்றியும்
அது மட்டுமல்லாமல் டுவென்டி 20 போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டியவராகவும் கேப்டன் டோணி விளங்குகிறார்.

34 வெற்றி
மொத்தம் 60 போட்டிகளில் ஆடி 34ல் வெற்றி, 24ல் தோல்வி, ஒரு டை, ஒரு நோ ரிசல்ட் என டோணியின் புள்ளிவிவரம் சொல்கிறது.

கடைசி 9 போட்டிகளில் 8ல் வெற்றி
மேலும் டோணி தலைமையில் இந்தியா கடைசியாக விளையாடிய 9 டுவென்டி 20 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications