For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சியின்போது டோணிக்கு தசை பிடிப்பு.. ஆசிய கோப்பை அணியில் பார்த்திவ் பட்டேல் சேர்ப்பு

By Veera Kumar

மும்பை: ஆசிய கோப்பை டி20 தொடருக்கான வலைப்பயிற்சியின்போது இந்திய கேப்டன் டோணிக்கு சதைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் விக்கெட் கீப்பராக பார்த்தீவ் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை டி20 தொடர், வரும் 24ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில், இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே தலைநகர் டாக்கா சென்றடைந்துள்ளனர்.

Asia Cup: MS Dhoni suffers muscle spasm, Parthiv Patel to join team

டாக்காவில் இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சி செய்து வருகிறார்கள். இன்றைய வலைப்பயிற்சியின்போது, கேப்டன் டோணிக்கு சதைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் முதலாவது டி20 போட்டியில் ஆட முடியுமா, முடியாதா? என்ற சந்தேகம் நிலவுகிறது.

இதையடுத்து, பார்த்திவ் பட்டேலை அணியில் சேர்த்துக்கொண்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டோணிக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக பட்டேல் அணியில் இருப்பார். டோணியால் ஆட முடியாதபட்சத்தில் பார்த்திவ் பட்டேல் களமிறக்கப்படுவார்.

Story first published: Monday, February 22, 2016, 18:16 [IST]
Other articles published on Feb 22, 2016
English summary
Indian captain Mahendra Singh Dhoni today (February 22) suffered a muscle spasm in the back during training ahead of the Asia Cup Twenty20 tournament here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X