Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: பாகிஸ்தான் வீரர்கள் அவுட்டானதை பார்த்து, மைதானத்திலேயே சிரித்த முஸ்தாக்.. என்ன நடந்தது?

துபாய்: ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி தகுதி பெற்று இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல் பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை விட பவுலிங் தான் காலம் காலமாக பலமாக இருந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பல்வேறு அரசியல் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த நாட்டின் பல முன்னாள் வீரர்களே பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர்.

Pakistan vs bangladesh

பாகிஸ்தான் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த முஸ்தாக் அகமது, அந்த அணியில் இருந்து அதிரடியாக ஓரம் கட்டப்பட்டார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே வேண்டாம் என முடிவெடுத்த அவர் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் இணைந்து வங்கதேச அணியின் பௌலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேச பவுலிங்கை எதிர்கொள்ள தடுமாறியது. இன்னும் சொல்லப்போனால் அந்த அணி 49 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என ரசிகர்கள் நம்பிய நிலையில், பௌலர்கள் வந்து அணியை காப்பாற்றினர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரரான ஃபக்கர் சமான், வங்கதேச ஸ்பின்னர் ரிசாத் உசேன் பவுலிங் எதிர்கொண்டு ஆட்டம் இழந்தார்.

அப்போது அவர் 20 பந்துகளில் எதிர்கொண்டு வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பக்கர் சமான் வெளியேறினார். பக்கர் சமான் பெவிலியன் நோக்கி சென்ற போது, அதனை பார்த்த வங்கதேச அணியின் பவுலிங் பயிற்சி ஆன முஸ்தாக் வாயை மூடி சிரித்தார். தனது சிரிப்பை அடக்க முடியாமல் அவர் இருந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனது சொந்த நாட்டு வீரர்கள் ஆட்டம் இழந்த முறையைப் பார்த்து முன்னாள் வீரரே சிரிக்கும் நிலைக்கு தான் பாகிஸ்தான் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இதுவே இந்திய அணி வீரர் இப்படி ஆட்டம் இழந்து ஒரு இந்திய முன்னாள் வீரர் சிரித்தால் நமது ரசிகர்கள் கோபப்படுவார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியை பார்த்தால் சிரிக்கும் நிலையில் தான் இருக்கிறது என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் ஒன்றும் சொல்லவில்லை

Story first published: Friday, September 26, 2025, 11:11 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+