Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாபர் அசாம் இல்லாமலேயே இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும்.. பாக்.தேர்வுக்குழுத் தலைவர் திமிர் பேச்சு

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் அந்த அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், ரிஸ்வான் இல்லை என்றாலும் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தும் என்று அந்நாட்டு தேர்வு குழு தலைவர் அக்கிப் ஜாவித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அவர் நாம் தேர்வு செய்துள்ள பாகிஸ்தான் அணி நிச்சயம் இந்தியாவை வீழ்த்தும் வல்லமை பெற்றது. இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே மிக பரபரப்பாக இருக்கும்.இந்தியா மட்டுமல்ல நமது அணி உலகின் எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்தும். அதே சமயம் பாகிஸ்தான் அணி மீது நாம் நெருக்கடி ஏற்படுத்தக் கூடாது.

Babar azam

இந்த அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கின்றது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை நாங்கள் முழுமையாக நீக்கவில்லை. அவர்கள் நிச்சயம் எதிர்காலத்தில் பரிசளிக்கப்படுவார்கள். நாங்கள் தற்போது இருக்கும் வீரர்கள் எவ்வாறு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை பார்த்து அணியில் வாய்ப்பு வழங்க இருக்கின்றோம்.

உதாரணத்திற்கு சயூம் அயூப்பையும்,பர்ஹான் மற்றும் பக்கர் சமான் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஃபர்கான் பாகிஸ்தான் அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கின்றார். கடைசியாக அவர் விளையாடிய 6 போட்டிகளில் மூன்று போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். சையும் அயூப் ஆரம்பத்தில் தடுமாறினாலும் தற்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

பாபர் அசாம், முகமது ரிஸ்வான் பொருத்தவரை அவர்களுக்கு எப்போதுமே வாய்ப்பு இருக்கின்றது. தற்போது பிக் பாஸ் போன்ற தொடர்களில் விளையாடி மேலும் அனுபவத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். யாரெல்லாம் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவார்கள் என்று அக்கிப் ஜாவித் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான அணி இந்தியாவை வரும் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது.

Story first published: Monday, August 18, 2025, 22:03 [IST]
Other articles published on Aug 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+