Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, பாகிஸ்தானுடன் பங்கேற்கும் 3வது அணி எது? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.. அதிர்ச்சி கொடுத்த அணி

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கிறது.

Recommended Video

IND vs PAK போட்டி முதல் Virat Kohli-க்கு புதிய Bat *Cricket

ஆறாவது அணியை தீர்மானிக்க ஆசிய கோப்பை தகுதி சுற்று நடைபெற்றது. இதில் யு.இ.ஏ, குவைத், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 4 அணிகள் பங்கேற்றது.

இதில் ரவுண்ட் ராபின் முறைப்படி ஒவ்வொரு அணிகளும், மற்ற அணியுடன் ஒரு முறை மோதியது. இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி 6வது அணியாக பங்கேற்கும்.

3வது அணி

3வது அணி

இதில் போட்டியை நடத்தும் யுஏஇ அல்லது குவைத் அணிகள் தான் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. ஹாங்காங் அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

திரில் வெற்றி

திரில் வெற்றி

ஹாங்காங் அணி இதுவரை யுஏஇ அணியை டி20 கிரிக்கெட்டில் வீழ்த்தியதே இல்லை. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

ஏ பிரிவு

ஏ பிரிவு

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2வது முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் 3வது அணியாக ஹாங்காங் தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு ஹாங்காங் பயமுறுத்திய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

ஹாங்காங் அணியில் யாசிம் முர்தசா, தகுதி சுற்றில் 3 போட்டியில் விளையாடி 130 ரன்களும், பாபர் ஹயாத் 3 போட்டியில் விளையாடி 97 ரன்களும் எடுத்துள்ளனர். பந்துவீச்சிலும் இஷான் கான் 3 போட்டியில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணியே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இதனால், இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்துவது ஹாங்காங்கிற்கு கடினமாக இருந்தாலும், சாத்தியங்கள் உள்ளன.

Story first published: Thursday, August 25, 2022, 15:55 [IST]
Other articles published on Aug 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+