ஆசிய கோப்பையில் ஆடப்போகும் ஆறாவது அணி எது ?
மலேசியா : ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா,இலங்கை,வங்கதேசம்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளன.
இந்த தொடரில் பங்குபெறும் ஆறாவது அணிக்கான தகுதி சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ்,ஹாங்காங், ஓமன், நேபால்,மலேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் பங்குபெற்று விளையாடி வருகிறது. தகுதிச்சுற்று போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் அணி ஆசிய கோப்பை போட்டியில் ஆறாவது அணியாக பங்குபெறும்.

தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் நாளை இறுதி போட்டியில் பங்குபெறுகின்றன.
நாளை நடக்கும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரில் பி பிரிவில் இடம்பெறும். பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதி போட்டி நாளை மலேசியாவில் நடைபெறுகிறது.
Story first published: Thursday, September 6, 2018, 10:27 [IST]
Other articles published on Sep 6, 2018


Click it and Unblock the Notifications