Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை தகுதி சுற்று இன்று தொடக்கம்.. இந்தியாவுடன் மோத போவது யார்?

மஸ்கட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதி சுற்று இன்று முதல் ஓமனில் தொடங்குகிறது.

Recommended Video

IND vs PAK போட்டி குறித்து Rohit Sharma தரமான விளக்கம்

பிரதான சுற்றுகள் வரும் 27ஆம் தேதி தொடங்கும் நிலையில், 5 டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், 6வது அணியை தீர்மானிக்கும் போட்டி, இன்று நடைபெறுகிறது.

இந்த தகுதிச் சுற்றில் சிங்கப்பூர், ஹாங்காங், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகள் ரவுண்ட் ராபின் முறைப்படி மோதிக் கொள்வார்கள். இதில் முதல் இடம் பிடிக்கும் அணி, பிரதான சுற்றுக்கு செல்லும்.

இந்த நிலையில் தகுதி சுற்றில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 2 ஆட்டத்தில் ஹாங்காங் அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், சிங்கப்பூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

 Asia cup Qualifiers – Hong Kong and Singapore kicks start the competition

சிங்கப்பூர் அணி கடைசியாக விளையாடிய 10 டி20 போட்டியில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கடைசி 5 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. சிங்கப்பூர் அணியின் அதிரடி வீரர் டிம் டேவிட் ஆஸ்திரேலியாவிற்கு விளையாட சென்றுவிட்டது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பையின் போது ஹாங்காங் அணி இந்தியாவையே பயமுறுத்தியது. ஆனால் தற்போது ஹாங்காங் அணியின் நட்சத்திர வீரர் அன்சுமான் ராத், இந்தியாவுக்கு சென்று உள்ளூர் போட்டியில் விளையாடுகிறார். இது அந்த அணிக்கு பின்னடைவை சந்தித்தது. பாபர் ஹயாத் மற்றும் ஐசாஸ் கான் போன்ற வீரர்கள் ஹாங்காங்கிற்கு பலமாக கருதப்படுகிறார்கள். இன்றைய ஆட்டத்தில் ஹாங்காங்கிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

Story first published: Saturday, August 20, 2022, 15:54 [IST]
Other articles published on Aug 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+