Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: இந்திய அணி வீரர்கள் மீது தவறில்லை.. அவமான சின்னமாக மாறி விட்டார்கள்.. அப்ரிடி கருத்து

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றதில் இந்திய வீரர்கள் மீது எந்த தவறும் இல்லை என முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ஆசிய கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் வளரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

Ind vs Pak

இதனால் இந்திய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என பிசிசிஐ சொல்லி இருக்கிறார்கள். இதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. என்னுடைய பார்வையில் இது ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்புக்கு அழகு இல்லை.

இதனால் உலகத்தின் முன்னிலையில் இந்திய வீரர்களுக்கு தான் அவப்பெயர் ஏற்படும். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலை சரியாக இருக்கின்றது என நினைக்கிறேன். நமது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நல்ல முடிவை எடுத்து இருக்கின்றார். நான் எப்போதுமே சொல்வது ஒரு வீரர் தான் நாட்டின் சிறந்த தூதராக இருக்க முடியும்.

ஆனால் நாமே நமது நாட்டுக்கு அவமானமாக மாறிவிடக்கூடாது. நான் இந்திய வீரர்கள் மீது எந்த குறையும் சொல்ல மாட்டேன். மேலே இருந்து வரும் உத்தரவுகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்தப் போட்டிக்கு முன்பு கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அகாவிடமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷன் நக்வியுடன் கைகுலுக்கினார்.

அப்போது ரசிகர்கள் இல்லை. இதனால் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க அரசால் முடியவில்லை . இதனால் தற்போது இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள். இதன் மூலம் விளையாட்டு உலகில் முன்னிலையில் இந்திய வீரர்கள் ஒரு அவமானச் சின்னமாக நிற்கிறார்கள் என்று சையது அப்ரிடி தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, September 17, 2025, 14:08 [IST]
Other articles published on Sep 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+