Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் ரோகித் சர்மா 4 சாதனை.. இலங்கைக்கு பதிலடி தந்த இந்தியா.. அஸ்வின் கொடுத்த நாக் அவுட் பஞ்ச்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணிக்கு 174 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

Recommended Video

IND vs SL போட்டியில் Rohit Sharma அதிரடி! Comeback கொடுத்த Srilanka *Cricket

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் ஒரே நாளில் 4 சாதனை படைத்தார்.

ராகுல் ஆட்டமிழப்பு

ராகுல் ஆட்டமிழப்பு

தொடக்க வீரராக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். சிஎஸ்கே வீரர் தீக்சனா வீசிய பந்தை, ஸ்விப் செய்ய முயன்ற போது, அவர் எல்பி டபிள்யூ ஆனார். பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடிய ராகுல், இம்முறை சொதப்பியதால் கேப்டன் ரோகித் சர்மா தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி களத்துக்கு வந்தார். தொடர்ந்த 2 முறை அரைசதம் விளாசியதால், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

கோலி டக் அவுட்

கோலி டக் அவுட்

மதுசங்கா வீசிய பந்தை கணிக்காமல் லேக் சைடில் சிக்சர் அடிக்க விராட் கோலி முயன்ற போது கிளின் போல்ட் ஆகியதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து 13 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த இந்தியா தடுமாறியது. இதனையடுத்து, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் சர்மா பிறகு அதிரடியை காட்டினார். குறிப்பாக ஹசரங்கா பந்துவீச்சில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 41 பந்துகளில் 72 ரன்கள் விளாசி ரோகித் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் ஆசிய கோப்பையில் 1000 ரன்கள் அடித்த ஒரே இந்திய ��ீரர், அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர், அதிக அரைசதம் அடித்த வீரர், அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்தார்.

அஸ்வின் பண்ச்

அஸ்வின் பண்ச்

மறுமுனையில் சூர்யகுமார் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் சொதப்பிய ரிஷப், ஹர்திக் ஜோடி இம்முறை அதிரடியாக ஆடியது. இருப்பினும் இருவரும் பெரிய ஸ்கோராக மாற்றாமல் தலா 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். தீபக் ஹுடாவும் 3 ரன்களில் வெளியேற இந்தியா தடுமாறியது. இறுதியில் அஸ்வின் ஒரு சிக்சர் அடித்து 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 8 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது.

Story first published: Tuesday, September 6, 2022, 22:06 [IST]
Other articles published on Sep 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+