ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்
Recommended Video

ஆசிய கோப்பை : இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்- வீடியோ
துபாய் : ஆசிய கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து
சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி களமிறங்குகிறது.

இப்போட்டி குறித்த ஒரு சிறு அலசல்…
இந்திய அணியைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றி இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஹாங்காங் அணிக்கெதிராக போராடி வெற்றி பெற்ற இந்திய அணி ,பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி குரூப் பி பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.
இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் கவலையளிப்பதாக இருந்தாலும் வலுவான தொடக்க வரிசை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. முதலாவது போட்டியில் தவான் சதம் மற்றும் ராயுடு அரைசதம் அடித்திருந்தினர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி அரைசதம் அடித்து தான் பார்மில் இருப்பதை உறுதி செய்துள்ளார்.
காயம் காரணமாக ஹார்டிக் பாண்டியா போட்டித் தொடரில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத ராகுலுக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. பந்துவீச்சில் சாஹல் மற்றும் யாதவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளது இந்திய அணிக்கு பலமாகும்.
பங்களாதேஷ் அணியை பொறுத்தவரை காயம் காரணமாக தமீம் இக்பால் விலகியிருப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகும். பங்களாதேஷ் அணி லீக் போட்டிகளில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 136 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்காத முஷ்பிகுர் ரஹீம் மற்றும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் இந்திய அணிக்கெதிரான போட்டியில் களமிறங்குவார்கள். தமீம் இக்பால் இல்லாத நிலையில் ரஹீம் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணி வலிமையாகவே உள்ளது. முஸ்தாபிஸுர் ரஹ்மான்,மெஹடி ஹுசைன் மற்றும் மொர்தசா ஆகியோர் வேகப்பந்துவீச்சிலும் சாகிப் அல் ஹசன் சுழல் பந்துவீச்சிலும் சிறப்பாக பந்து வீசும் வீரர்கள் ஆவர். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ஹொசைன் சாண்டோ ஆகியோர் களமிறங்குவார்கள்.
எனினும் சமீபத்திய போட்டிதொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு கடுமையான சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் இந்த 11 வீரர்கள் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது -
இந்திய அணி - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், சாஹல், ஜாஸ்ப்ரிட் பும்ரா
வங்கதேச அணியில் இந்த 11 வீரர்கள் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது -
வங்கதேச அணி - லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான், முஹம்மத் மிதுன், மக்மதுல்லாஹ், மோசட்டேக் ஹுசைன், மெஹிதி ஹாசன், மஷ்ராபே மொர்டாசா, ரூபெல் ஹுசைன், முஸ்டாபிசூர் ரஹ்மான், அரிஃபுல் ஹக்
Story first published: Friday, September 21, 2018, 11:58 [IST]
Other articles published on Sep 21, 2018


Click it and Unblock the Notifications