For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி ! விராட் கோஹ்லி அசத்தல் !!

By Karthikeyan

மிர்பூர்: ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டி இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. விராட் கோஹ்லி அபாரமாக ஆடி 49 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ஆசிய கோப்பை இருபது ஓவர் போட்டிகள் வங்கதேசத்தில் 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.

இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின, நீண்ட நாட்களுக்கு பிறகு இரு அணிகளும் மோதுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். டாஸ் வென்ற கேப்டன் டோணி பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதில் ரகானோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

India beat Pakistan by 5 wickets

நெஹராவின் பந்து வீச்சை சிக்கிய ஹபீஸ் (4), அவுட்டாகி வெளியேறினார். ஷார்ஜல் (7), மன்சூர் (10), மாலிக் (4), வந்த வேகத்தில் வேகமெடுத்து பெவிலியன் திரும்பினார். உம்ர் அக்மல் (3), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிடி 2 ரன்னில் அவுட்டாகினார்.

சர்பராஸ் மட்டும் ஓரளவு தாக்குபிடித்து பாகிஸ்தான் அணிக்கு 25 ரன்கள் சேர்த்தார். மற்றவர்களும் ஏமாற்ற பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து சுருண்டது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய பாண்ட்யா 3 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

India beat Pakistan by 5 wickets

இதையடுத்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரகானே, ரோகித் சர்மா ரன் டக் அவுட் ஆகினர். ரெய்னா 1 ரன்னில் வெளியேறினர்.

பின்னர் இணைந்த யுவராஜ், விராட் ஜோடி சரிவில் இருந்து இந்திய அணியை மீட்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். விராட் 49 ரன்கள் எடுத்து ஆட்ட்மிழந்தார். பாண்ட்யா டக் அவுட் ஆக டோணி ஒரு பவுண்டரி அடித்ததன் மூலம் 15.3 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 85 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் (14), டோணி (7) ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Story first published: Sunday, February 28, 2016, 11:09 [IST]
Other articles published on Feb 28, 2016
English summary
India captain Mahendra Singh Dhoni won the toss and elected to bowl first against Pakistan in their Asia Cup Twenty20 game here tonight at Sher-e-Bangla National Stadium. Shikhar Dhawan was replaced by Ajinkya Rahane due to a niggle. Pakistan were bowled out for 83 in 17.3 overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X