Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட், யுவராஜ் அதிரடி: ஆசிய கோப்பை பைனலுக்கு முன்னேறியது இந்தியா !

மிர்புர்: இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை டி20 போட்டியில் விராட் கோஹ்லி, யுவராஜ் அதிரடியால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகிறது, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

Asia Cup T20: India opt to bowl against Sri Lanka; Shikhar back, no Malinga

இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. வங்காளதேசம் 3 போட்டிகளில் 4 புள்ளியும், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் 2 ஆட்டத்தில் விளையாடி தலா 2 புள்ளியும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதிய 3 ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்நிலையில் லீக் ஆட்டத்தின் 7-வது போட்டி இன்று மாலை 7 மனிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி பீல்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. இலங்கை அணிக்கு சண்டிமாலும், தில்ஷனும் தொடக்கம் தந்தனர்.

இந்திய அணியின் அசத்தல் பந்து வீச்சில் விழுந்த சண்டிமால் 4 ரன்களில் வெளியேறினார். 18 ரன்கள் எடுத்திருந்த தில்ஷன், பாண்ட்யா பந்தில் அவுட் ஆகினார். ஜெயசூர்யா (3), கேப்டன் மாத்யூஸ்(18), வர்தனா (22), திசாரா பெரேரா (17), குலசேகரா (13), ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தது. சமரவீரா 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகமால் இருந்தார். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் (1) ரன்னில் வந்த வேகத்தில் வெளியேற ரோகித் சர்மா தன் பங்கிற்கு 14 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ரெய்னா 25 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட், யுவராஜ் ஜோடி இலங்கை அணியின் பந்து வீச்சை பறக்கவிட்டனர். இந்த கூட்டணி இந்திய அணியின் வெற்றியையும் உறுதி செய்தது. யுவராஜ் சிங் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அரை சதம் கடந்த விராட் 56 ரன்னும் டோணி (7) ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி இலக்கை எட்டியது. ஏற்கனவே வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

Story first published: Wednesday, March 2, 2016, 10:30 [IST]
Other articles published on Mar 2, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+