கோஹ்லி பார்மில் இருந்தால் கூடவே சாதனையும் "சப்ஜாடாக" வந்து சேரும்!
மிர்பூர்: விராத் கோஹ்லி எப்போதெல்லாம் அசத்தலாக ஆடுகிறாரோ கூடவே சாதனைகளையும் படைக்கத் தவறியதில்லை. அந்த வகையில் இப்போது யுவராஜ் சிங்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
பிட்ச் எப்படி இருந்தாலும், பவுலர் யாராக இருந்தாலும் கவலைப்படாமல், அடித்து ஆட வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்.. கோஹ்லி.. "விஜய்" ஆகி விடுவார்... அதாவது அவர் சொல்வதை அவரே கேட்க மாட்டார்... அடித்துத் துவைத்து விட்டுத்தான் ஓய்வார்.
கோஹ்லியின் அபாரமான ஆட்டத்தால்தான் இந்தியா ஆசியாக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

13வது அரை சதம்
நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் தனது 13வது அரை சதத்தைப் போட்டார் கோஹ்லி. இது அவருக்கு 36 போட்டிகலில் 34வது இன்னிங்ஸ் ஆகும்.

51 சதவீதம்
56 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த கோஹ்லியின் டி 20 பேட்டிங் சராசரி 51 சதவீதத்தத் தாண்டியுள்ளது. இந்த பார்மட் போட்டிகளில் குறைந்தது 500 ரன்களைக் குவித்துள்ள வீரர்களியே அதிக சராசரி இதுதான்.

6 இன்னிங்ஸ்களில் 4வது அரை சதம்
இந்த ஆண்டில் கடைசி 5 இன்னிங்ஸ்களில் இது 4வது அரை சதமாகும். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவர் 90, 59, 50 என அசத்தினார். அத்தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

மூன்றில் இரண்டு
ஆசியாக் கோப்பைத் தொடரில்முதல் போட்டியில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார் கோஹ்லி. ஆனால் 2வது போட்டியில் 49 ரன்களை எடுத்தார். நேற்றைய போட்டியில் 56 ரன்களை எடுத்தார்.

ஆட்ட நாயகன் சாதனை
நேற்றைய போட்டியில் கோஹ்லிதான் ஆட்ட நாயகனாக தேர்வானார். இது அவருக்கு 7வது டி20 ஆட்ட நாயகன் விருதாகும். இதன் மூலம் யுவராஜ் சிங்கின் 7 ஆட்ட நாயகன் விருதுகள் சாதனையை சமன் செய்துள்ளார் கோஹ்லி.

ஆனால் குறைந்த போட்டிகள்
ஆனால் கோஹ்லி குறைந்த போட்டிகளில் இதைச் செய்துள்ளார். அந்த வகையில் அவர் யுவராஜ் சிங்கை விட பெட்டர்தான். 49 போட்டிகளில் ஆடி 7 ஆட்ட நாயகன் விருதுகளை யுவராஜ் பெற்றார். ஆனால் கோஹ்லி இதை 36 போட்டிகளில் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications