For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கையில் தொடரும் பிரச்சினை.. ஆசிய கிரிக்கெட் போட்டிக்கு சிக்கல்.. கவலையில் ரசிகர்கள்

கொழும்பு: இலங்கையில் வெடித்துள்ள உள்நாட்டு பிரச்சினையால் நடப்பு ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற சிக்கல் எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வடிர இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டது.

இந்த தொடர் ஏற்கனவே 2020ஆம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

உள்நாட்டு பிரச்சினை

உள்நாட்டு பிரச்சினை

தற்போது இலங்கையில் உள்நாட்டு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உணவு பொருட்கள் முதல் பெட்ரோல், டீசல், மின்சாரம் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைவாசி விண்ணை தொட்டுள்ளது.

பதற்றம்

பதற்றம்

இதனால் இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜபக்தே ஆதரவாளர்கள், போராட்டக்காரர்களை தாக்கியதால் வன்முறை வெடித்தது. இலங்கை அமைச்சர்களின் வீடுகளையும், மகிந்த ராஜபக்சேவின் வீட்டையும் மக்கள் தீயிட்டுஎரித்தனர். இதனால் இலங்கையில் பதற்றம் நிலவுகிறது.

கிரிக்கெட்டுக்கு சிக்கல்

கிரிக்கெட்டுக்கு சிக்கல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தை மீறி கிரிக்கெட் போட்டிகளை நடத்தினாலும், போதிய மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்விளக்குகள் எரியவும் வாய்ப்பு இல்லை. உணவு தட்டுப்பாடும் சேர்ந்துள்ளதால், அங்கு ஆசிய கிரிக்கெட் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேறு இடத்திற்கு மாற்றம்?

வேறு இடத்திற்கு மாற்றம்?

ஐசிசி டி20 உலககோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுவதால, அதற்கு முன்னோட்டமாக இந்த தொடர் அமையும் என்பதால் போட்டியை திட்டமிட்டப்படி நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுத்துள்ளது. இதனால் ஆசிய கோப்பை போட்டிகளை வங்கதேசத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Thursday, May 19, 2022, 17:40 [IST]
Other articles published on May 19, 2022
English summary
Asia cup tournament is in big trouble after srilanka crisis இலங்கையில் தொடரும் பிரச்சினை.. ஆசிய கிரிக்கெட் போட்டிக்கு சிக்கல்.. கவலையில் ரசிகர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+