For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நான் பீகார் பையன்.. இதெல்லாம் எனக்கு..".. செஞ்சுரி அடித்த பின் வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த 'நச்' பதில்

துபாய்: அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் 171 ரன்கள் விளாசி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, களத்தில் தன்னை வம்பிழுத்த எதிரணி விக்கெட் கீப்பருக்குத் தனது பாணியில் கொடுத்துள்ள பதில் இணையத்தில் பரவிய நிலையில், "நான் பீகாரில் இருந்து வருகிறேன்.. இதெல்லாம் எனக்குப் பழகிப்போன விஷயம்" என்று அவர் போட்டிக்கு பின் பேசியது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிரான போட்டியில் இந்திய ஜூனியர் அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அடித்த 171 ரன்கள் தான்.

Asia Cup U19 Vaibhav Suryavanshi s Reply I m from Bihar Sledging is Like Eating Dessert

வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, யுஏஇ அணியின் விக்கெட் கீப்பர் சலே அமின் அவருக்குப் பின்னால் நின்று கொண்டு தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டே இருந்தார். வைபவ்வின் கவனத்தைச் சிதறடிக்க அவர் பல வார்த்தைகளைப் பேசினார். ஆனால், வைபவ் எதற்கும் ரியாக்ட் செய்யாமல் தனது பேட் மூலம் பதில் சொன்னார்.

"நான் பீகார் பையன்"

போட்டிக்குப் பிறகு 'ஆட்டநாயகன்' விருதைப் பெற்ற வைபவ்விடம், விக்கெட் கீப்பரின் இந்தச் செயல்பாடு குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தான் சுவாரசியம். "இல்லை, அது என்னைப் பாதிக்கவில்லை. முதலாவதாக, நான் பீகாரில் இருந்து வருகிறேன். அதனால் பின்னால் இருந்து யார் என்ன பேசினாலும், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருப்பது எனக்குப் பழகிப்போன விஷயம். விக்கெட் கீப்பரின் வேலையே பேசுவதுதான். நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தினேன். வழக்கமாக நான் என்ன செய்வேனோ, அதையே இன்றும் செய்தேன்" என்று மிகவும் முதிர்ச்சியாக பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், "போட்டிக்கு ஒரு நாள் முன்புதான் துபாய் வந்தடைந்தேன். வந்தவுடன் கடுமையாகப் பயிற்சி செய்தேன். அதுதான் இன்று களத்தில் கைகொடுத்தது" என்றார்.

இடதுகை ஆட்டக்காரரான வைபவ், 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார். இதில் 14 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் அண்டர்-19 ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த உலக சாதனையையும் அவர் படைத்தார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 433 ரன்கள் குவித்து, யுஏஇ அணியை 199 ரன்களில் சுருட்டியது. அடுத்ததாக டிசம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. அந்தப் போட்டியிலும் வைபவ் தனது அதிரடியைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, December 13, 2025, 14:18 [IST]
Other articles published on Dec 13, 2025
English summary
Asia Cup U19: Vaibhav Suryavanshi's Reply: "I'm from Bihar, Sledging is Like Eating Dessert"
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+