Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேசாம கண்ணை மூடித் தூங்கிருவோம்.. இது கோஹ்லி டெக்னிக்!

டாக்கா: வங்கதேசத்து போக்குவரத்து நெரிசல் உலகப் புகழ் பெற்றது. இதுபோன்ற போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போது பேசாமல் கண்ணை மூடி தூங்கி விடுவேன் என்று கூறியுள்ளார் விராத் கோஹ்லி.

போக்குவரத்து நெரிசல் இந்தியாவில் ரொம்பப் பிரபலம். பெங்களூரு போன்ற நகரங்களில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போய் வருவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

இதேபோலத்தான் வங்கதேசத்திலும். டாக்கா போன்ற நகரங்களில் மிக மோசமாக இருக்குமாம் போக்குவரத்து நெரிசல். இந்த நிலையில் வங்கதேசத்து போக்குவரத்து நெரிசல் குறித்து விராத் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசியா கோப்பை

ஆசியா கோப்பை

ஆசியா கோப்பைக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் நாளை மோதவுள்ளன. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

டிராபிக் ஜாம்

டிராபிக் ஜாம்

இந்த நிலையில் டாக்காவில் செய்தியாளர்களிடம் கோஹ்லி பேசினார். அப்போது வங்கதேசத்து போக்குவரத்து நெரிசல் குறித்தும் செய்தியாளர்கள் கோஹ்லியிடம் கேட்டனர்.

பேசாம தூங்கிருவேன்

பேசாம தூங்கிருவேன்

அதற்கு கோஹ்லி பதிலளிக்கையில், பேசாமல் தூங்கிருவேன். நான் மட்டுமல்ல பல வீரர்களும் அப்படியே கண்ணை மூடி தூங்கிருவோம். வேற வழி.

எங்க ஊரிலும் இப்படித்தான்

எங்க ஊரிலும் இப்படித்தான்

இங்குதான் என்றில்லை. இந்தியாவிலும் கூட போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. அங்கு மட்டும் சிறப்பாக இருக்கிறது என்று கூற முடியாது.

டெல்லி - மும்பை

டெல்லி - மும்பை

டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியாது. எனவே இங்கும், அங்கும் ஒரே மாதிரிதான் நிலைமை என்றார் கோஹ்லி.

Story first published: Tuesday, February 23, 2016, 14:23 [IST]
Other articles published on Feb 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+