Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா வந்துரும்.. ஒத்திப் போடுங்க.. ஏசியா லெவன், வேர்ல்ட் லெவன் போட்டிகள் தள்ளிவைப்பு!

பெங்களூரு: கொரோனா பீதி காரணமாக ஏசியா லெவன் மற்றும் வேர்ல்ட் லெவன் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Recommended Video

Asia XI vs World XI matches postponed due to Coronavirus

கொரோனா பீதி காரணமாக விளையாட்டு உலகமும் தத்தளித்துக் கொண்டுள்ளது. பல முக்கியத் தொடர்கள், போட்டிகள் தள்ளிப் போடப்பட்டு வருகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியம், தனது நாட்டில் நடைபெறவிருந்த ஏசியன் லெவன் மற்றும் வேர்ல்ட லெவன் போட்டிகளைத் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

 முஜிபுர் ரஹ்மான் பிறந்த நாள் போட்டிகள்

முஜிபுர் ரஹ்மான் பிறந்த நாள் போட்டிகள்

வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்ச் 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள் இரு போட்டிகளாக இது திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இதை கொரோனா பீதி காரணமாக தள்ளி வைத்துள்ளனர்.

 கிறிஸ் கெய்ல் கோலி விளையாடவுள்ளனர்

கிறிஸ் கெய்ல் கோலி விளையாடவுள்ளனர்

விராட் கோலி, பாப் டு பிளஸ்ஸி, கிறிஸ் கெய்ல் போன்ற முக்கிய வீரர்கள் இந்தப் போட்டியில் விளையாடவுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா பீதி காரணமாக முக்கிய வீர்ரகள் வருவார்களா மாட்டார்களா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் போட்டிகளை தள்ளி வைத்திருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 பல கட்டுப்பாடுகள் விதிப்பு

பல கட்டுப்பாடுகள் விதிப்பு

இதுகுறித்து வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. எனவே நாங்களும் எங்களது போட்டிகளை தள்ளி வைத்துள்ளோம். ஒரு மாதம் கழித்து நிலையை ஆய்வு செய்து பின்னர் முடிவெடுப்போம். தற்போதைக்கு இப்போட்டிகள் தள்ளிப் போடப்படுகின்றன என்றார் அவர்.

 இப்போதைக்கு தள்ளிவைப்பு

இப்போதைக்கு தள்ளிவைப்பு

ஏற்கனவே உலகம் முழுவதும் பல முக்கிய போட்டித் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளில் கால்பந்துப் போட்டிகளையே உள்ளரங்கில் நடத்த ஆரம்பித்துள்ளனர். ரசிகர்கள் கூடினால் கொரோனா பரவி விடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். இத்தாலியன் லீக் போட்டிகள், சீரி ஏ போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Thursday, March 12, 2020, 11:21 [IST]
Other articles published on Mar 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+