Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கே.எல்.ராகுலுக்கு கெடு விதித்த பிசிசிஐ.. ஆசியக்கோப்பையில் விளையாடுவதில் சிக்கல்.. என்ன பிரச்சினை!

மும்பை: ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு கடைசி கட்ட கெடு விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

 இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணியின் பேட்டிங் வரிசையை ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என பலமாக உருவாக்கிய போதும், கே.எல்.ராகுலை தேர்வு செய்தது தான் ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கு காரணம் அவரின் பேட்டிங் ஃபார்ம் இன்னும் உறுதிசெய்யப்படாதது தான்.

 என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் ஒரு போட்டியில் கூட கே.எல்.ராகுல் இதுவரை விளையாடவே இல்லை. அயல்நாட்டில் அறுவைசிகிச்சை செய்துக்கொண்ட அவருக்கு, கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவர் பழையபடி நல்ல ஃபார்மில் இருக்கிறாரா என்பது இன்னும் தெரியவில்லை.

பிசிசிஐ விதித்த கெடு

பிசிசிஐ விதித்த கெடு

இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ புதிய கெடு விதித்துள்ளது. தற்போது பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் உள்ள கே.எல்.ராகுலுக்கு இன்னும் ஒரு வாரத்தில் உடற்தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசியக்கோப்பைக்காக அமீரகம் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வி.வி.எஸ். லக்‌ஷ்மணன் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

தகுதி பெறவில்லை என்றால்?

தகுதி பெறவில்லை என்றால்?

ஒருவேளை கே.எல்.ராகுலால் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால், உடனடியாக ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணிக்குள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், ஆசியக்கோப்பையின் பேக் அப் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 11, 2022, 12:02 [IST]
Other articles published on Aug 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+