Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரர்தான் கேப்டன்.. ஏசியன் கேம்ஸ் 2023 - முழு அட்டவணை, இந்திய அணி - முழு விவரம் இங்கே!

மும்பை : 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி (Asian Games) செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. இதில் 40 விதமான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில் கிரிக்கெட் போட்டிகளும் கடந்த சில ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இதுவரை இந்திய அணி இதில் பங்கேற்றதில்லை.

Asian Games 2023 : Indian team list and match schedule

முதன் முறையாக இந்திய அணி இந்த முறை பங்கேற்க உள்ளது. அதற்கான அணியை சில வாரங்கள் முன்பு பிசிசிஐ அறிவித்தது. பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அனைத்து முக்கிய அணிகளும் இரண்டாம் கட்ட அணிகளைத் தான் இந்த தொடருக்கு அனுப்பி வைக்க உள்ளன.

இந்திய அணியிலும் சிஎஸ்கே அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியே பங்கேற்று டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு அணிகள் தவிர்த்து முக்கியமான அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் தான். அந்த அணி மங்கோலியா அணியுடன் மோதி வெற்றி பெற்றே காலிறுதிக்கு வர முடியும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் பிரிவு போட்டி அட்டவணை வெளியாகி இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணை உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம் : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 கிரிக்கெட் தொடர் அட்டவணை :

செப்டம்பர் 27, 0930: நேபாளம் - ஜப்பான்

செப்டம்பர் 27, 1430: ஹாங்காங் - சிங்கப்பூர்

செப்டம்பர் 28, 0930: மலேசியா - பஹ்ரைன்

செப்டம்பர் 28, 1430: ஜப்பான் - கம்போடியா

செப்டம்பர் 29, 0930: சிங்கப்பூர் - தாய்லாந்து

செப்டம்பர் 29, 1430: மாலத்தீவு - மலேசியா

அக்டோபர் 1, 0930: ஆப்கானிஸ்தான் - மங்கோலியா

அக்டோபர் 1, 1430: கம்போடியா - நேபாளம்

அக்டோபர் 2, 0930: தாய்லாந்து - ஹாங்காங்

அக்டோபர் 2, 1430: பஹ்ரைன் - மாலத்தீவு

அக்டோபர் 3, 0930: காலிறுதி (இந்தியா - தகுதிச் சுற்றில் முதலிடம் பெற்ற அணி)

அக்டோபர் 3, 1430: காலிறுதி (பாகிஸ்தான் - தகுதிச் சுற்றில் இரண்டாம் இடம் பெற்ற அணி)

அக்டோபர் 4, 0930: காலிறுதி (இலங்கை - தகுதிச் சுற்றில் மூன்றாமிடம் பெற்ற அணி)

அக்டோபர் 4, 1430: காலிறுதி (வங்காளதேசம் - தகுதிச் சுற்றில் நான்காமிடம் பெற்ற அணி)

அக்டோபர் 6, 0930: அரையிறுதி (காலிறுதி 1 வெற்றியாளர் - காலிறுதி 4 வெற்றியாளர்)

அக்டோபர் 6, 1430: அரையிறுதி (காலிறுதி 2 வெற்றியாளர் - காலிறுதி 3 வெற்றியாளர்)

அக்டோபர் 7, 0930: வெண்கலப் பதக்கப் போட்டி (அரையிறுதி 1 தோல்வியாளர் - அரையிறுதி 2 தோல்வியாளர் )

அக்டோபர் 7, 1430: தங்கப் பதக்கப் போட்டி - இறுதி (அரையிறுதி 1 வெற்றியாளர் - அரையிறுதி 2 வெற்றியாளர் )

Story first published: Tuesday, September 12, 2023, 7:03 [IST]
Other articles published on Sep 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+