Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asian Games-இல் ஆடும் இந்திய கிரிக்கெட் அணி.. எந்த சேனலில் பார்க்கலாம்? Sony Liv-இல் இலவசமா?

ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

முதன் முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று இருக்கிறது. இதே தொடரில் மகளிர் அணி முதன்முறையாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றது.

ஆண்கள் அணியும் தங்கம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருகின்றனர்.

இந்த முறை ஆண்கள் டி20 தொடரில் 14 அணிகள் பங்கேற்கின்றன. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தரவரிசையின் அடிப்படையில் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

Asian Games 2023 T20 cricket - India cricket team squad, match schedule, telecast channel, live streaming in Sony Liv

மற்ற ஒன்பது ஆசிய நாடுகள் மூன்று குரூப்களாக பிரிக்கப்பட்டு ரவுண்டு டாபின் முறையில் தங்கள் குரூப்களில் விளையாடுவார்கள். அதில் வெல்லும் மூன்று அணிகளோடு, ஆப்கானிஸ்தான் அணியும் சேர்ந்து வரிசைப்படுத்தப்படும்.

அந்த வரிசையின் அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுடன் அந்த நான்கு அணிகள் காலிறுதியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பின் அதில் வெல்லும் அணிகள் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் மோதும். இந்தப் போட்டியில் தோற்கும் அணி வெள்ளிப் பதக்கம் பெறும்.

அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகள் வெண்கலப் பதக்கப் போட்டியில் மோதும். இந்த டி20 தொடருக்கான போட்டி அட்டவணை, போட்டி நடைபெறும் நேரம், தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரம், லைவ் ஸ்ட்ரீமிங் விவரம், இந்திய அணி விவரம் ஆகியவை இங்கே -

2௦23 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய (சீனியர் ஆண்கள்) அணி விவரம் :

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப்.

காத்திருப்பு வீரர்களின் பட்டியல்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன்.

ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் தொலைக்காட்சி ஒளிபரப்பு -

சோனி குழும தொலைக்காட்சிகளான சோனி டென் சேனல்களில் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகும். இதில் பல சேனல்கள் டிஷ் நெட்வொர்க்கில் கட்டண சேனல்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் ஸ்ட்ரீமிங் : சோனி லிவ் app மற்றும் இணையதளத்தில் இந்த கிரிக்கெட் தொடரை காணலாம். ஆனால், சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே போட்டிகளை பார்க்க முடியும். இலவச ஒளிபரப்பு கிடையாது.

ஆசிய விளையாட்டு போட்டி 2023 - ஆண்கள் கிரிக்கெட் அணி குழு பிரிவு

குரூப் ஏ: மங்கோலியா, மாலத்தீவு, நேபாளம்

குரூப் பி: கம்போடியா, ஹாங்காங் சீனா, ஜப்பான்

குரூப் சி: மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து

காலிறுதி (நேரடி நுழைவு): இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆண்கள் டி20 தொடர் போட்டி அட்டவணை -

செப்டம்பர் 27 புதன்
6:30 - நேபாளம் vs மங்கோலியா - குரூப் ஏ
11:30 ஜப்பான் vs கம்போடியா - குரூப் பி

செப்டம்பர் 28 வியாழன்
6:30 மலேசியா vs சிங்கப்பூர் - குரூப் சி
11:30 மங்கோலியா vs மாலத்தீவு - குரூப் ஏ

செப்டம்பர் 29 வெள்ளி
6:30 கம்போடியா vs ஹாங்காங் - குரூப் பி
11:30 சிங்கப்பூர் vs தாய்லாந்து - குரூப் சி

அக்டோபர் 1 ஞாயிறு
6:30 மாலத்தீவு vs நேபாளம் - குரூப் ஏ
11:30 ஹாங்காங் vs ஜப்பான் - குரூப் பி

அக்டோபர் 2 திங்கள்
6:30 தாய்லாந்து vs மலேசியா - குரூப் சி

அக்டோபர் 3 செவ்வாய்
6:30 இந்தியா vs தகுதி பெறும் அணி - காலிறுதி போட்டி 1
11:30 பாகிஸ்தான் vs தகுதி பெறும் அணி - காலிறுதி போட்டி 2

அக்டோபர் 4 புதன்
6:30 இலங்கை vs தகுதி பெறும் அணி - காலிறுதி போட்டி 3
11:30 வங்கதேசம் vs தகுதி பெறும் அணி - காலிறுதி போட்டி 4

அக்டோபர் 6 வெள்ளி
6:30 காலிறுதி 1 வெற்றியாளர் vs காலிறுதி 4 வெற்றியாளர் - அரையிறுதி போட்டி 1
11:30 காலிறுதி 2 வெற்றியாளர் vs காலிறுதி 3 வெற்றியாளர் - அரையிறுதி போட்டி 2

அக்டோபர் 7 சனி
6:30 அரையிறுதி 1 தோல்வியாளர் vs அரையிறுதி 2 தோல்வியாளர் - வெண்கலப் பதக்கப் போட்டி

11:30 அரையிறுதி 1 வெற்றியாளர் vs அரையிறுதி 2 வெற்றியாளர் - தங்கப் பதக்கப் போட்டி

Story first published: Thursday, September 28, 2023, 10:40 [IST]
Other articles published on Sep 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+