இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடக்க வாய்ப்பு.. ஆசிய விளையாட்டு போட்டி 2026 கிரிக்கெட் அட்டவணை
மும்பை: ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆண்கள் அணிகள் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணியில் திலக் வர்மா, அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வைபவ் சூர்யவன்ஷி என முன்னணி வீரர்கள் பலரும் உள்ளனர்.

ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் நடப்பு சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் நேரடியாகக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மட்டுமே மோத முடியும்.
சர்வதேச டி20 அந்தஸ்து கொண்ட இப்போட்டிகளில் பெண்கள் தொடர் செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும், ஆண்கள் தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரையிலும் நடைபெற உள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் - பிரிவு விவரங்கள்:
• குழு ஏ (முதற்கட்ட சுற்று): ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம்.
• குழு பி (முதற்கட்ட சுற்று): ஹாங்காங், மலேசியா, ஓமன்.
• காலிறுதி போட்டிகள்: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் லீக் சுற்றில் வெற்றி பெறும் 4 அணிகளுடன் மோதும். தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்று நடைபெறும்.
பெண்கள் கிரிக்கெட் - காலிறுதிப் போட்டிகள்:
• இந்தியா vs ஜப்பான் • வங்கதேசம் vs சீனா • இலங்கை vs மலேசியா • பாகிஸ்தான் vs தாய்லாந்து
இந்திய கிரிக்கெட் அணிகள் விவரம்:
• ஆண்கள் அணி: ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி.
• பெண்கள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், கமலினி, பாரதி புல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கௌத், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி சர்மா.


Click it and Unblock the Notifications
