Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு 2026.. செப். 20 அன்று இந்தியா ஆடும் போட்டிகள் பட்டியல்.. பதக்க வாய்ப்பு உண்டா?

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று (செப்டம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை) இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மிக முக்கியமான நாளாக அமைந்துள்ளது. துப்பாக்கி சுடுதல், வுஷூ, டெக்பால் ஆகிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு இன்று நேரடிப் பதக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

காலை 5:30 மணிக்கே வுஷூ இறுதிப்போட்டியில் சூரஜ் சிங் களம் கண்டு பதக்க வேட்டையைத் தொடங்குகிறார். தொடர்ந்து காலை 6:15 மணிக்கு பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர் கூட்டணி தங்கம் வெல்லும் முனைப்பில் துப்பாக்கி சுடுதலில் ஈடுபடுகிறது. டெக்பால் விளையாட்டில் குயின்சி டிசோசா தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 2 வெண்கலப் பதக்கப் போட்டிகளில் விளையாடுகிறார்.

Asian Games 2026 Key Medal Events and Full Schedule for India on September 20

குழுப் போட்டிகளில், மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ஹாக்கியில் இந்திய மகளிர் அணி உஸ்பெகிஸ்தானையும், ஆடவர் அணி இந்தோனேசியாவையும் எதிர்கொள்கின்றன. பாட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸிலும் இந்திய அணிகளுக்கு அடுத்தடுத்து முக்கிய போட்டிகள் உள்ளன.

செப்டம்பர் 20 - இந்திய போட்டிகளின் முழு அட்டவணை (இந்திய நேரப்படி):

  • காலை 5:30 - வுஷூ: சூரஜ் சிங் (ஆடவர் சாங்குவான் இறுதிப்போட்டி - பதக்க வாய்ப்பு)
  • காலை 6:15 - துப்பாக்கி சுடுதல்: இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் (மகளிர் 10 மீ ஏர் ரைபிள் தகுதிச்சுற்று & குழு இறுதிப்போட்டி)
  • காலை 6:30 - டேபிள் டென்னிஸ்: இந்தியா vs இந்தோனேசியா (மகளிர் பிரிவு)
  • காலை 6:30 - டெக்பால்: குயின்சி டிசோசா vs யுயினா சகமோட்டோ (மகளிர் ஒற்றையர் வெண்கலப் பதக்கப் போட்டி)
  • காலை 7:00 - டெக்பால்: குயின்சி டிசோசா / முகமது அனஸ் பெக் vs வியட்நாம் (கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கப் போட்டி)
  • காலை 7:10 - எம்.எம்.ஏ: சுச்சிகா தரியால் vs அல்தன்சிமேக் (மகளிர் 60 கிலோ காலிறுதி)
  • காலை 7:22 - நீச்சல்: ஆகாஷ் மணி (ஆடவர் 100 மீ ஃப்ரீஸ்டைல்)
  • காலை 7:30 - ஹாக்கி: இந்தியா vs உஸ்பெகிஸ்தான் (மகளிர் பூல்-பி)
  • காலை 7:37 - நீச்சல்: உத்கர்ஷ் பாட்டீல் / ரிஷப் தாஸ் (ஆடவர் 100 மீ பேக்ஸ்ட்ரோக்)
  • காலை 9:00 - டேபிள் டென்னிஸ்: இந்தியா vs இந்தோனேசியா (ஆடவர் பிரிவு)
  • காலை 10:30 - கிரிக்கெட்: இந்தியா vs வங்கதேசம் (மகளிர் அரையிறுதி)
  • காலை 11:00 - துப்பாக்கி சுடுதல்: மகளிர் 10 மீ ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப்போட்டி (தகுதி பெறுவதன் அடிப்படையில்)
  • காலை 11:30 - பாட்மிண்டன்: இந்தியா vs கஜகஸ்தான் (மகளிர் 16-வது சுற்று)
  • காலை 11:30 - ஹாக்கி: இந்தியா vs இந்தோனேசியா (ஆடவர் பூல்-ஏ)
  • மதியம் 12:30 - டேபிள் டென்னிஸ்: இந்தியா vs சிங்கப்பூர் (மகளிர் பிரிவு)
  • மதியம் 2:00 - எம்.எம்.ஏ: வருண் சன்யால் (ஆடவர் 77 கிலோ காலிறுதி)
  • மதியம் 3:00 - டேபிள் டென்னிஸ்: இந்தியா vs ஈரான் (ஆடவர் பிரிவு)
  • மதியம் 3:10 - வுஷூ: அபர்ணா vs சோகண்ட் (மகளிர் 52 கிலோ சான்டா 16-வது சுற்று)
  • மாலை 4:50 - வுஷூ: விக்ராந்த் பலியான் vs சொஹைல் (ஆடவர் 75 கிலோ சான்டா 16-வது சுற்று)
  • நேரம் பின்னர் அறிவிக்கப்படும்- செபக் டக்ரா: இந்திய ஆடவர் அணி (குழு-பி லீக் போட்டி)
Story first published: Sunday, September 20, 2026, 8:46 [IST]
Other articles published on Sep 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+