Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் ஓட்டப்பந்தயத்தில் 11 நொடி தடையை ஹரிதா உடைப்பார்.. டூட்டி சந்த் கருத்து

டெல்லி: இந்திய பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் நட்சத்திர வீராங்கனையாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 23 வயதான ஹரிதா பத்ரா அதிவேகமாக வளர்ந்து வருகிறார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்திய தடகள தொடரின் இறுதிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் லேன் 6-இல் ஓடிய அவர், பந்தய தூரத்தை 11.22 வினாடிகளில் கடந்து அசத்தினார்.

இதன் மூலம், 100 மீட்டர் ஓட்டப்பந்தய வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது மிகவேகமான பெண் என்ற பெருமையை ஹரிதா பெற்றுள்ளார். இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், ஹரிதா தனது தனிப்பட்ட சிறந்த செயல்திறனையும் பதிவு செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் டூட்டி சந்த் படைத்த 11.17 வினாடிகள் என்ற தேசிய சாதனையை விட வெறும் 0.05 வினாடிகள் மட்டுமே ஹரிதா பின்தங்கியுள்ளார்.

Harita Bhadra

இந்த சீசனில் அவரது தொடர்ச்சியான வளர்ச்சி தடகள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு அவர் களமிறங்கிய ஒவ்வொரு 100 மீட்டர் போட்டியிலும் தனது முந்தைய சாதனைகளை அவரே முறியடித்து வருகிறார்.

IND vs AFG: இந்திய மண்ணில் மாபெரும் சாதனை படைக்க தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி

IND vs AFG: இந்திய மண்ணில் மாபெரும் சாதனை படைக்க தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி

சென்னையில் நடைபெற்ற இந்திய தடகள தொடர்-6 போட்டியில் முதலில் 11.55 வினாடிகளில் இலக்கை எட்டிய ஹரிதா, பின்னர் ஆகஸ்ட் மாதம் புவனேசுவரில் நடைபெற்ற உலக தடகள சில்வர் லெவல் கான்டினென்டல் டூர் போட்டியில் அதனை 11.46 வினாடிகளாக மேம்படுத்தினார். தற்போது டெல்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 11.22 வினாடிகளில் இலக்கை எட்டி, தேசிய அளவில் டூட்டி சந்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மிகக் குறுகிய காலத்திலேயே தனது நேரத்தை கணிசமாகக் குறைத்து தேசிய சாதனைக்கு மிக அருகில் வந்துள்ளார்.

ஹரிதாவின் இந்த வேகம் 100 மீட்டருடன் மட்டும் நின்றுவிடவில்லை. 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார். புவனேஸ்வரில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 23.14 வினாடிகளில் இலக்கை எட்டி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் படைத்தார். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் 23.55 வினாடிகளில் கடந்து தகுதி பெற்றார்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய உட்புற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 60 மீட்டர் பிரிவில் பங்கேற்ற ஹரிதா, 7.32 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவின் 60 மீட்டர் வரலாற்றில் இரண்டாவது சிறந்த நேரமாகும்.

டூட்டி சந்தின் சாதனையான 7.28 வினாடிகளுக்கு மிக அருகில் இது உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம், ஐச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் பிரிவில் போட்டியிட அவர் தகுதி பெற்றுள்ளார்.

ஹரிதாவின் இந்த அபார வளர்ச்சியைப் பற்றி இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனையும், தேசிய சாதனையாளருமான டூட்டி சந்த் பாராட்டியுள்ளார். "ஹரிதாவால் 11.09 வினாடிகளில் இலக்கை எட்ட முடியும், ஏன் 11 வினாடிகள் என்ற தடையைக் கூட உடைக்க முடியும். அவர் தற்போது உள்ள ஃபார்மைப் பார்க்கும்போது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று டூட்டி சந்த் தெரிவித்துள்ளார்.

 ஆசிய போட்டிக்காக ஜப்பானில் கண்டெய்னர் வீடு.. வீரர்கள் வசதிக்காக இந்தியாவிலே SAI சிறப்பு ஏற்பாடு

Also Read

ஆசிய போட்டிக்காக ஜப்பானில் கண்டெய்னர் வீடு.. வீரர்கள் வசதிக்காக இந்தியாவிலே SAI சிறப்பு ஏற்பாடு

ஹரிதா பத்ரா வெறும் நம்பிக்கைக்குரிய இளம் வீராங்கனையாகத் தொடங்கி, இன்று இந்தியாவின் இரண்டாவது அதிவேக பெண்மணியாக உருவெடுத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், அவரது இலக்கு இப்போது மிக உயரியதாக உள்ளது. ஜப்பானில் அவர் வெல்லும் பதக்கம் அவரது விளையாட்டு வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும்.

Story first published: Sunday, September 13, 2026, 15:44 [IST]
Other articles published on Sep 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+