Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய போட்டியில் தங்கம்.. தமிழக கிரிக்கெட் வீராங்கனைக்கு 75 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்

மும்பை: தமிழ்நாட்டை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை குணாலன் கமலினி, இந்திய மகளிர் அணியின் ஆசிய கோப்பை 2026 வெற்றியில் பங்காற்றியதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அவருக்கு 75 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவித்துள்ளார்.

2008 ஜூலை 20-ல் மதுரையில் பிறந்த கமலினி, இடதுகை பேட்ஸ்மன் மற்றும் விக்கெட் கீப்பராக விளங்கி வருகிறார். லெக் ஸ்பின் பந்துவீச்சிலும் திறன் கொண்டவர். சிறு வயதில் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்து வந்த அவர் பின்னர் கிரிக்கெட்டுக்கு மாறினார்.

Gunalan Kamilini

தமிழ்நாடு அணியின் அண்டர்-19 அணியை 2024-ல் தேசிய சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தியவர். அந்தப் போட்டியில் 8 போட்டியில் 311 ரன்கள் எடுத்து இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையானார்.

வைபவ் சூர்யவன்ஷி இல்லாதது ஏமாற்றம்..இந்திய வீரர்களுடன் விளையாடியது கனவு போல் இருக்கு-ஜப்பான் கேப்டன்

வைபவ் சூர்யவன்ஷி இல்லாதது ஏமாற்றம்..இந்திய வீரர்களுடன் விளையாடியது கனவு போல் இருக்கு-ஜப்பான் கேப்டன்

2025-ல் மலேசியாவில் நடைபெற்ற ICC மகளிர் அண்டர்-19 T20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்து, அந்த தொடரில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்தார். அதே ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் WPL ஏலத்தில் ₹1.6 கோடிக்கு வாங்கப்பட்டு, லீக் வரலாற்றில் இளம் அறிமுக வீரராக அறிமுகமானார்.டிசம்பர் 2025-ல் இலங்கைக்கு எதிரான T20I தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார்.

2026 ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடி ஒரு ரன் அவுட்டில் ஈடுபட்டார். இந்த சாதனையைப் பாராட்டி, முதலமைச்சர் விஜய் கமலினிக்கு 75 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை அறிவித்தார்.

ஆசிய போட்டி.. இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்த மகளிர் கிரிக்கெட் அணி.. பைனலில் இலங்கை தோல்வி

Also Read

ஆசிய போட்டி.. இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்த மகளிர் கிரிக்கெட் அணி.. பைனலில் இலங்கை தோல்வி

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் எதிர்கால நட்சத்திரமாக கருதப்படும் கமலினியின் தந்தை குணாளன் கடந்த மே மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சூழலில் தந்தையை இழந்த பிறகும், கமலிணி அதிலிருந்து மீண்டு வந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அவரது தொடர் சாதனைகள் தமிழக இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளன.

Story first published: Tuesday, September 22, 2026, 17:21 [IST]
Other articles published on Sep 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+