Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய யூத் கேம்ஸ்.. பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை உலக சாதனை.. தமிழக வீரருக்கு வெள்ளி

பஹைரன்: இளையோருக்கான ஆசிய போட்டிகளில் இந்திய அணி வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில் மகளிருக்கான 44 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்திஸ்மிதா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

பஹரைனில் உள்ள மணாமா என்ற இடத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ப்ரீத்திஸ்மிதா அதிகபட்சமாக கிளீன் மற்றும் ஜர்க் பிரிவில் 92 கிலோ எடை தூக்கி அசத்தினார். இதன் மூலம் மகளிர் இளையோருக்கான பிரிவில் அதிக எடை தூக்கிய வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.

Asian Youth Games 2025

இதேபோன்று ஸ்னாட்ச் பிரிவில் 66 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆசிய யூத் போட்டியில் ஸ்னாக்ஸ் ஒரு பதக்கமும் கிளீனர் பிரிவுக்கு ஒரு பக்கமும் வழங்கப்படுகிறது. 16 வயது ஆன பிரீத்தி ஸ்மிதா 87 கிலோ எடையை முதலில் தூக்கி அசத்தினார். அதன் பின்பு 90 கிலோ எடையை தூக்கினார். அவர் இறுதியாக 92 கிலோ எடையை தூக்கி உலக சாதனை படைத்தார்.

இரண்டாவது இடத்தில் சீன வீராங்கனை வூ ஜிகாங் 88 கிலோ எடையையும் பிலிப்பைன்ஸ் வீராங்கனை பிரின்சஸ் ஜே 78 கிலோ எடையை தூக்கி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றன. இது இந்தியாவிலும் மூன்றாவது தங்கம் ஆகும். தனிநபர் பிரிவில் இந்தியாவிலும் முதல் தங்கமாகும். ஆடவர் கபடி அணியும் மகளிர் கபடி அணியும் இரண்டு தங்கங்களை ஏற்கனவே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று 60 கிலோ எடைப்பருவில் தமிழக வீரர் ஆறுமுக பாண்டியன் மகாராஜன் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்திய அணி 7 பதக்கங்களை வென்றிருக்கிறது. இதன் மூலம் பதக்க எண்ணிக்கை 24 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியா இந்த தொடரில் மூன்று தங்கம், 10 வெள்ளி மற்றும் 11 வெங்கல பதக்கத்தை வென்றிருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 222 இந்திய வீராங்கனைகள் பங்கு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 27, 2025, 18:32 [IST]
Other articles published on Oct 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+