Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி நடுவர் குழுவில் முதல் பெண்ணாக இணைந்தார் கேத்தி கிராஸ்!

துபாய்: நியூசிலாந்தின் கேத்தி கிராஸ் புதிய சாதனை படைத்துள்ளார். ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடுவர்கள் பட்டியலில் முதல் பெண் நடுவராக இவர் சேர்ந்துள்ளார்.

2014ம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் பட்டியலில் கேத்தி கிராஸும் இடம் பிடித்துள்ளதன் மூலம் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இவர்தான் ஐசிசி நடுவர்களில் முதல் பெண் ஆவார்.

இந்த ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் பட்டியலில் கேத்தி தவிர நிகல் மாரிசன், சமீர் பண்டேகர், மார்க் ஹாதோர்ன், வேன்ட் லூவ், டேவிட் ஓடியம்போ, புத்தி பிரதான், சரிகா சிவ பிரசாத், ரிச்சர்ட் ஸ்மித், இயான் ராமேஜ், கர்ட்னி யங் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

56 வயது கேத்தி

56 வயது கேத்தி

56 வயதாகும் கேத்தி கிராஸ், நியூசிலாந்தின் தாமரானி என்ற இடத்தில் பிறந்தவர்.

எந்தெந்த போட்டிகளுக்கு

எந்தெந்த போட்டிகளுக்கு

நடுவராகியுள்ள கேத்தி கிராஸ், ஐசிசியின் உலக கிரிக்கெட் லீக் 3 முதல் 6 வரையிலான போட்டிகளுக்கு நடுவராக இருப்பார். மேலும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் இவர் நடுவராக செயல்படுவார்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் பணியாற்றஇயவர்

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் பணியாற்றஇயவர்

ஏற்கனவே கேத்தி கிராஸ், 2009ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி உலக மகளிர் கோப்பைப் போட்டிகளில் பணியாற்றியுள்ளார். அதே போட்டி 2013ல் இந்தியாவில் நடந்தபோதும் அவர் பணியாற்றியுள்ளார். 2011ல் நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தகுதிப் போட்டியிலும் அவர் பணியாற்றியுள்ளார். இப்போதுதான் முதல் முறையாக ஆண் நடுவர்களின் பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார்.

ரொம்ப சந்தோஷம்

ரொம்ப சந்தோஷம்

ஐசிசியின் பொது நடுவர்கள் பட்டியலில் தானும் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி தருவதாகவும், மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கிராஸ் தெரிவித்துள்ளார். இது தனக்குக் கிடைத்த கெளரவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 30, 2014, 19:24 [IST]
Other articles published on Jan 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+