For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் 2 மாசத்துக்கு கொண்டாட்டம் தான்!

By Staff

மும்பை: இலங்கைக்கு எதிரான தொடரில், தயவு தாட்சண்யம் இல்லாமல், புரட்டி புரட்டி எடுத்து திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்தகட்டமாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் உள்நாட்டில் விளையாட உள்ளது.

சொந்த மண்ணில் புலி என்று கூறப்படும் இந்திய அணி, முதலில், ஆஸ்திரேலியாவுடன், 5 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட உள்ளது.. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன், 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.

Aus, NZ tour schedule

இதற்கான தேதிகள் மற்றும் விளையாட உள்ள இடங்கள் அடங்கிய கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சென்னையில், வரும், 17ம் தேதி துவங்குகிறது. முன்னதாக, 12ம் தேதி ஒரு பயிற்சி ஆட்டமும் நடக்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் மாற்றம் ஏதுமில்லை. அதே நேரத்தில், நியூசிலாந்து எதிரான தொடரில், கான்பூர் மற்றும் கட்டாக் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. தர்போது அது லக்னோ மற்றும் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலேயாவுக்கு எதிரான போட்டிகள் நடைபெற உள்ள தேதிகள் மற்றும் இடம்::

செப்டம்பர் 12ல் சென்னையில் பயிற்சி ஆட்டம் விளையாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒருதினப் போட்டிகள், 17ல் சென்னை, 21ல் கோல்கட்டா, 24ல் இந்தூர், 28ல் பெங்களூரு, அக்டோபர் 1ல் நாக்பூரிலும் நடக்கின்றன.

பின்னர், ஆஸ்திரேலியாவுடன் மூன்று டி-20 போட்டிகள் நடக்க உள்ளன. அக்டோபர் 7ல் ராஞ்சி, 10ல் குவஹாத்தி, 13ல் ஐதராபாத்தில் நடக்க உள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் நடைபெற உள்ள தேதிகள் மற்றும் இடம்:

அக்டோபர் 17 மற்றும் 19ல் மும்பையில் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. அக்டோபர் 22ல் மும்பை, 25ல் புனே, 29ல் லக்னோவில் ஒருதினப் போட்டிகள் நடக்க உள்ளன. நவம்பர் 1ல் டில்லி, 4ல் ராஜ்கோட், 7ல் திருவனந்தபுரத்தில் மூன்று டி-20 போட்டிகளில் இந்தியா மோத உள்ளது.

Story first published: Friday, September 8, 2017, 18:57 [IST]
Other articles published on Sep 8, 2017
English summary
Australian, Newzealand cricket team’s Indian tour programme released
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+