Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs AFG: "மேக்ஸ்வெல்" பெயரை கேட்டவுடன் கொந்தளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன்.. நோஸ் கட் பதில்

லாகூர்: ஆப்கானிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கியமான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட உள்ளது. அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணியை கிளென் மேக்ஸ்வெல் தனி ஆளாக நின்று வீழ்த்தியது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்மதுல்லா ஷாஹிதியிடம் கேள்வி எழுப்பினார். மேக்ஸ்வெல் குறித்த கேள்வியை எதிர்கொண்ட உடன் ஆப்கானிஸ்தான் கேப்டன் கோபமடைந்து மேக்ஸ்வெல் மற்றும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது குறித்துப் பேசி இருக்கிறார்.

AUS vs AFG Champions Trophy 2025 Afghanistan

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வென்றால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 291 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடியபோது தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

அப்போது கிளென் மேக்ஸ்வெல் தனது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்புடன், கிரிக்கெட் உலகம் அதுவரை பார்த்திராத ஒரு இன்னிங்ஸ் ஆடினார். அந்தப் போட்டியில் அவர் 201 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை தனி ஆளாக வெற்றி பெற வைத்தார். அது ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் மேக்ஸ்வெல்-லை வீழ்த்த ஆப்கானிஸ்தான் அணி திட்டமிட்டு இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வியை எதிர்கொண்ட அஸ்மதுல்லா ஷாஹிதி கோபத்துடன் பேசினார். "நாங்கள் இங்கே மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டுமே விளையாட வந்து இருக்கிறோம் என நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் அப்படித்தானே இதைப்பற்றி நினைக்கிறீர்கள்? நாங்கள் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் விளையாடத்தான் திட்டமிட்டு இருக்கிறோம்."

"2023 உலகக் கோப்பையில் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார். ஆனால், அது வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே. அதன் பின் நாங்கள் அதே அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் வீழ்த்தி இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு எதிரணிக்கு எதிராகவும் இதே போலவே திட்டமிடுகிறோம். நாங்கள் இங்கு ஒரு தனிப்பட்ட வீரருக்கு எதிராக விளையாட வரவில்லை. நாங்கள் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறோம். மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டும் நாங்கள் விளையாடவில்லை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட இருக்கிறோம்" என்றார்.

Story first published: Thursday, February 27, 2025, 18:35 [IST]
Other articles published on Feb 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+